இலித்தியம் சிட்ரேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலித்தியம் சிட்ரேட்டு (Lithium citrate) என்பது Li3C6H5O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இலித்தியம் மற்றும் சிட்ரேட்டு அயனிகள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் உளவியல் மருத்துவத்தில் பித்துநிலை, இருமுனையப் பிறழ்வு முதலான நோய்களுக்கான சிகிச்சையில் மனநிலை நிலைப்படுத்தியாக பயன்படுகிறது.[1] இவ்வுப்பில் உள்ள பகுதிப்பொருள்களில், இலித்தியம் விரிவான மருந்தியல் பண்புகளுடன் செயல்திறன் மிக்க பகுதியாக உள்ளது.
இலித்திய நீரில் சிட்ரேட்டு உள்ளிட்ட பல இலித்தியம் உப்புகள் கலந்துள்ளன. மருந்தகங்களில் கிடைக்கும் பழைய இலித்திய கோக் மென்பானத்தில் கொக்கக் கோலா திரவமும் இலித்திய நீரும் கலந்துள்ளது[2]. 7அப் மென்பானம் முதலில் இலித்தியமேற்றிய எலுமிச்சை சுண்ணாம்பு சோடா என்றே பெயரிடப்பட்டது. 1929 இல் இப்பானம் உருவாக்கப்பட்டபோது இதில் இலித்தியம் சிட்ரேட்டு கலந்து இருந்தது. மீத்தங்கல் பிரச்சினை சிகிச்சைக்கு இப்பானமே காப்புரிமை பெற்ற மருந்தாக ஒரு காலத்தில் விற்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டில் 7 அப் பானத்தில் இருந்து இலித்தியம் சிட்ரேட்டு நீக்கப்பட்டது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads