இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்)

From Wikipedia, the free encyclopedia

இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்)
Remove ads

இலினொய் பல்கலைக்கழகம் - அர்பானா-சாம்பேன் (University of Illinois - Urbana-Champaign), ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இது அர்பானா-சாம்பேன் பெருநகர பகுதியில் 1867ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இலினொய் பல்கலைக்கழக அமைப்பின் ஆரம்ப நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டது. 59,000 மாணவர்களுக்கும் கூடுதலாகப் பயிலும் இந்தப் பல்கலைக்கழகம் ஐக்கிய அமெரிக்க பொதுத்துறை பல்கலைக்கழகங்களில் மிகுந்த பதிவுபெற்றவைகளில் ஒன்றாக உள்ளது.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...

இலினொய் பல்கலைக்கழகத்தின் இவ்வளாகத்தில் 16 பள்ளிகளும் கல்லூரிகளும் உள்ளன.[2] 150 இளநிலை பாடதிட்டங்களும் 100க்கும் மேலான முதுநிலை பாடதிட்டங்களும் வழங்கப்படுகின்றன. பல்கலை வளாகத்தில் 651 கட்டிடங்கள் 6,370 ஏக்கர்கள் (2,578 ha) பரப்பளவில் அமைந்துள்ளன.[3] 2016ஆம் ஆண்டில் இதன் வருடாந்தர வரவுசெலவு திட்டம் $2 பில்லியனுக்கும் கூடுதலாக இருந்தது.[4] இப்பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்பூங்கா90க்கும் கூடுதலான துவக்கநிலை நிறுவனங்களுக்கு தாயகமாக உள்ளது. [5]

இலினொய் பல்கலைக்கழகம் - அர்பானா சாம்பேன் உயர்நிலை கல்வி வழங்கலில் "R1: முனைவர் பட்ட பல்கலைக்கழகங்கள் – மீயுயர் ஆய்வுச் செயல்திறன்" என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[6] In fiscal year 2019ஆம் ஆண்டில், ஆய்விற்காக மொத்தம் $652 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.[7][5] இந்த வளாகத்திலுள்ள நூலகம் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது மிகப் பெரிய நூலகமாகும்.[8] இந்தப் பல்கலைக்கழகத்தில் மீக்கணினி பயன்பாட்டிற்கான தேசிய மையம் இயங்குகின்றது. [9]

இலினொய் விளையாட்டணிகள் என்.சி.ஏ.ஏ.வின் முதல் டிவிசன் போட்டிகளில் பங்கேற்கின்றன. இவை பைட்டிங் இல்லினி என அழைக்கப்படுகின்றன. இலினொய் விளையாட்டாளர்கள் ஒலிம்பிக் விளையாட்டுகளில் 29 பதக்கங்கள் வென்றுள்ளனர். இப்பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்களில் 24 நோபல் பரிசாளர்களும், 27 புலிட்சர் பரிசு வாகையாளர்களும், 2 பீல்ட்சு பதக்கதாரிகளும், 2 தூரிங்கு விருது பெற்றோரும் உள்ளனர்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads