இலையுதிர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலையுதிர் காடுகள் (deciduous) (/dɪˈsɪdʒuəs/) எனப்படுபவை தாவரவியல் துறைக் கூற்றுப்படி, [1] "முதிர்ச்சியின் முடிவில் விழுதல்"[2] மற்றும் "விழுந்துவிடும் தன்மை" கொண்ட காடுகள்[3] எனப் பொருள்படுகிறது. பொதுவாக மரங்கள் மற்றும் புதர் தாவரங்கள் இலையுதிர்காலத்தில் இலைகளை உதிர்க்கும். மலர்ந்த பிறகு இதழ்களை உதிர்க்கும் மற்றும் பழுத்த பின் பழங்களை உதிர்ப்பதனை இதற்கு சான்றுகளாகக் கூறலாம்.
![]() |
![]() |
![]() |
இலையுதிர் மரங்களின் கட்டைகள் தொழிற்சாலைகளில் பலவிதங்களில் பயன்படுகின்றன. மரச்சாமான்கள் தயாரிக்க, கட்டுமானத்திற்கு, தளங்கள் அமைக்க, அழகுக் கலைப் பொருட்களை உருவாக்க, பேஸ்பால் மட்டைகள் தயாரிக்க, நீள் பலகைகளாகச் செதுக்க என பலவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
Remove ads
தாவரவியல்
இலையுதிர் தாவரங்கள் குறிப்பாக மரங்கள், புதர்கள் போன்றவை ஆண்டின் சில காலங்களில் தங்கள் இலைகள் முழுவதையும் உதிர்க்கின்றன.[4] . இந்த முறைக்கு வெட்டி நீக்கல் (abscission) என்று பெயர்[5] . மிதவெப்ப அல்லது துருவ காலநிலைகளில் இலை இழப்பு குளிர்காலத்துடன் தொடர்புடையதாக உள்ளது[6] .ஆனால் சில சமயங்களில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல வறண்ட பகுதிகளில் தாவரங்கள் மழை அளவு குறைபாடு வறட்சி ஆகியவற்றால் இலைகளை இழக்கின்றன.
செயல்பாடு

பசுமை தாவரங்களுடன் ஒப்பிடும்போது இலையுதிர் தாவரங்களில் சில நன்மை தீமைகள் உள்ளன. இலையுதிர் தாவரங்கள் நீரிழப்பை குறைப்பதற்காகவும், பனிக்காலத்தில் தன்னை தகவமைத்துக் கொள்வதற்காகவும், வரக்கூடிய பருவங்களில் புதிய இலைகளை உருவாக்கத் தேவையான வளங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன[8] . இலைகள் உதிர்ந்த இடத்தில்சிறு பள்ளங்கள் ஏற்படுகின்றன.
இலையுதிர்ப்பின் மூலமாக தாவரங்களில் ஏற்படும் காழ்க்கலன் மூலக பாதிப்பினை குறைக்க இயலும். இதன்மூலம் இலையுதிர் தாவரங்களில் காழ்க்கலன் மூலகங்கள் அதிக அளவிலான விட்டங்களைப் பெறுவதற்கு இது உதவுகிறது.மேலும் கோடைகாலங்களில் அதிக அளவிலான ஆவியுயிர்ப்பிற்கு இது உதவுகிறது.
பகுதிகள்
வளரும் பருவத்தின் இறுதியில் தங்கள் இலைகளை இழக்கும் தன்மையுடைய மரங்களை அதிகமாகக் கொண்ட காடுகள் இலையுதிர் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன[9].
மிதவெப்ப மண்டல இலையுதிர் காடுகள் தென் அமெரிக்கா, ஆசியா, இமய மலையின் தென் சரிவு, ஐரோப்பா, ஒசீனியாவின் சாகுபடி பகுதிகளில் காணப்படுகின்றன
- உலர்-பருவ இலையுதிர் வெப்பமண்டல காடுகள்
- அமெரிக்காவில் டெக்சாஸ் , கலப்பு வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல இலையுதிர் காடுகள் வசந்த காலத்தில்
Remove ads
மேலும் காண்க
- மாறாப் பசுமை
- அரை-பசுமை / அரை-இலையுதிர்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads