இளவிச்சிக்கோ

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விச்சிமலை அரசன் விச்சிக்கோ. விச்சிக்கோவின் தம்பி இளவிச்சிக்கோ. இளவிச்சிக்கோவும், இளங்கண்டீரக்கோவும் விச்சிமலை அரண்மனை அவைக்களத்தில் அமர்ர்ந்திருந்தனர். அவைக்களம் சென்ற புலவர் வன்பரணர் இளங்கண்டீரக்கோவை மகிழ்வுடன் தழுவினார். இளவிச்சிக்கோவைத் தழுவவில்லை. தழுவாமைக்கான காரணத்தைப் புலவர் இளவிச்சிக்கோவிடம் கூறுகிறார். இளவிச்சிக்கோவும் தழுவும் தகுதி உள்ளவன் தானாம். ஆனால் அவன் நன்னன் மருகனாம். அதாவது நன்னன் மகளை மணந்துகொண்டிருந்தானாம். இளவிச்சிக்கோவின் மாமனாரான நன்னன் அவனை நாடிச் சென்றவர்களுக்கு எதுவும் வழங்கமாட்டானாம். அதனால் அந்த நன்னனைப் புலவர்கள் போற்றிப் பாடுவதில்லையாம். புலவர் போற்றாத நன்னன் மகளை மணந்ததால் வன்பரணர் இளவிச்சிக்கோவைத் தழுவவில்லையாம். இளங்கண்டீரக்கோ கடையெழு வள்ளல்களில் ஒருவனான கண்டீரக்கோப்பெருநள்ளியின் தம்பி என்பதால் அவனைத் தழுவினாராம்.

சான்று -- வன்பரணர் - புறநானூறு 149
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads