இழுநாய்

From Wikipedia, the free encyclopedia

இழுநாய்
Remove ads

சக்கரம் இல்லாத அடிப்பலகைகளைக் கொண்ட "சிலெட்" எனப்படும் ஊர்திகளைத் தூவிப்பனி அல்லது பனிக்கட்டியில் இழுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் நாய்களை சிலெட் நாய் (Sled dog) (இழுநாய்) என்பர். இந்நாய்களின் உடலில் பட்டைகள் கட்டப்பட்டு அவை பனியூர்தியுடன் பூட்டப்பட்டிருக்கும். பல நாய்கள் இவ்வாறு ஓர் ஊர்தியுடன் பூட்டப்பட்டு பாரங்களை இழுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும்.

Thumb
செப்பாலாவின் பத்து சைபீரிய இழுநாய்களைக் கொண்ட அணி

பல்வேறு இனங்களைச் சேர்ந்த நடுத்தர அளவுள்ள நாய்கள் இழுநாய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. நெடுந்தொலைவு தளராது வண்டியிழுக்கும் திறனும் வேகமாகச் செல்லலும், இழுநாய்களாகப் பயன்படுத்தப்படும் நாய்களுக்கு இருக்கவேண்டிய இன்றியமையாத இரண்டு முதன்மையான குணங்கள். இந்நாய்கள் ஒருநாளில் ஐந்தில் இருந்து எண்பது மைல் தொலைவு வரை செல்ல வல்லவையாக இருக்க வேண்டும்.[1][2][3]

Remove ads

வரலாறு

Thumb
1833 இல் வரையப்பட்டது - இழுநாய்களின் வகைகள்
Thumb
கனடாவின் இனுவிக் பகுதியில் ஏறும் வெள்ளை அசுக்கி வகை இழுநாய்கள்.

கனடா, லாப்லாந்து, கிரீன்லாந்து, சைபீரியா, சுக்ச்சி மூவலந்தீவு, நார்வே, பின்லாந்து, அலாஸ்கா ஆகிய பகுதிகளில் இழுநாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.[4]

அலாசுக்காவில் நடத்தப்படும் ஐடிட்டாராடு இழுநாய்ப் போட்டி மிகவும் புகழ்பெற்றது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads