இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இழைமணிகளின் டி ஆக்சிரிபோநூக்லியிக் காடி என்பது இழைமணிகளுக்கு உள்ளே அமைந்திருக்கும் டி ஆக்சிரிபோநியூக்லியிக் காடியாகும். இதை ஆங்கிலத்தில் (Mitochondrial DNA, மைட்டோக்கோன்றியல் டிஎன்ஏ) அல்லது சுருக்கமாக mtDNA (என்று குறிப்பிடுவர். இதனை மாரரிட் எம். கே. நாசு, சில்வேன் நாசு (Margit M. K. Nass and Sylvan Nass) ஆகியோர்[1], 1963 இல் எதிர்மின்னி நுண்ணோக்கியின் உதவியாலும், எல்லென் ஆசல்புருன்னெர் (Ellen Haslbrunner), ஆன்சு டுப்பி (Hans Tuppy), காட்பிரீடு இழ்சாட்சு (Gottfried Schatz) என்பவர்கள்[2].1964 இல் தூய்வெய்திய உயிர்வேதிக் கரைசல் தேர்வுகளின் வடிவுகளின் வழியும் கண்டுபிடித்தார்கள்[1],[3].

ஓர் உயிரணுவின் உட்கருவில் உள்ள டிஎன்ஏவும் இழைமணி டிஎன்ஏ வும் வெவ்வேறு வகையில் தோற்றம்பெற்று வளர்ச்சி அடைந்ததாக எண்ணுகிறார்கள். இழைமணி டிஎன்ஏ-க்கள் (mtDNA) இன்றுள்ள யூக்கார்யோடிக் உயிரணுக்களின் முன்னுயிர் வடிவங்களால் சூழப்பட்டிருந்த பாக்டீரியாவின் வட்ட மரபணுச்சரங்களில் இருந்து வந்ததாகக் கருதுகின்றனர். ஒவ்வொரு இழைமணியிலும் (mitochondion) ஏறத்தாழ 2 முதல் 10 வரை இழைமணி டிஎன்ஏ படிகள் (பிரதிகள்) இருப்பதாக மதிப்பிட்டிருக்கிறார்கள்[4].
இன்றுள்ள உயிரினங்களில் உள்ள இழைமணிகளில் காணப்படும் பெரும்பான்மையான புரதங்களை உருவாக்கத் தேவையான குறியீடுகள் உட்கரு டிஎன்ஏவில் உள்ளன. இழைமணிகளின் டி ஆக்சிரிபோநியூக்லியிக் காடி மரபணு சடுதி மாற்றம் போன்ற நிகழ்வுகளால் சேதம் அடையாது, ஆதலால் ஓர் இனம் தோன்றிய காலத்தை இதைக் கொண்டு எளிதாக கண்டுபிடிக்க இயலும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads