ஈநாடு

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா மாநிலங்களில் அதிகம் விற்கப்படும் செய்தித்தாள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஈநாடு (Eenadu ) என்பது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா மாநிலங்களில் அதிகம் விற்கப்படும் இந்தியாவின் மிகப் பெரிய[4] தெலுங்கு மொழி தினசரி செய்தித்தாள் ஆகும்.[5]

விரைவான உண்மைகள் வகை, வடிவம் ...

இது 1974 இல் இந்திய திரைப்படத் தயாரிப்பாளரும், ஊடக தொழில்முனைவோருமான இராமோசி ராவ் அவர்களால் நிறுவப்பட்டது.[6] அவர் 2020 வரை செய்தித்தாளின் தலைமை ஆசிரியராக இருந்தார்

Remove ads

பெயர்

ஈநாடு என்பது தெலுங்கு மொழியில் “இன்று/இன்றைய நாள்” மற்றும் “இந்த நிலம்” இரு பொருள்களைக் கொண்ட ஒரு பல்வகைச் சொல்லாகும்.[7]

வரலாறு

விசாகப்பட்டினத்தில் ஆரம்ப நாட்கள்

முன்னதாக தனது இராமோஜி குழுமத்தின் பிரியா ஊறுகாய்கள் மற்றும் மார்கதர்சி நிதி நிறுவனம் மூலம் வெற்றி பெற்ற தொழிலதிபர் இராமோசி ராவ் என்பவரால் 10 ஆகஸ்ட் 1974 அன்று விசாகப்பட்டினத்திலிருந்து ஈநாடு செய்தித்தாள் தொடங்கப்பட்டது.[8] அப்போது, இந்தியன் எக்சுபிரசு குழுமத்திற்கு சொந்தமான ஆந்திர பிரபா, முன்னணி பிராந்திய செய்தித்தாளாக இருந்தது.

தொடக்கத்தில் அதன் வினியோகம் குறைவாகவே இருந்தது. விசாகப்பட்டினத்தில் தொடங்கப்பட்டபோது, ஒரு வாரத்திற்கு 3,000 பிரதிகளுக்கு மேல் விற்க முடியவில்லை. [9] ஈநாடு நாளிதழில் வெளியீடாக மாற முடியாமல் திணறியது. இருப்பினும், இது சில பிராந்தியங்களில் பிரபலமாக இருந்தது. மேலும் போட்டி ஒரு பிரச்சினையாக இருந்தது. நிர்வாகம் அதன் முக்கிய முடிவுகளை எடுத்து நிர்வாகக் குழுவின் ஒரு பகுதியாக புதிய இயக்குநர்களை நியமித்தது. பின்னர், செய்த்தித்தாள் பிராந்தியத்தில் மிக அதிகமாக விநியோகிக்கப்படும் செய்தித்தாள் என்ற இன்று இருக்கும் நிலையை நோக்கிச் சென்றது:

மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கம்

ஈநாடு 4,000 பிரதிகள் அச்சுப் பிரதிகளுடன் தொடங்கியது. கையால் எழுத்துகள் கோர்க்கப்பட்டு இரண்டாவது கை அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டது. ஆனால் அது 1976 ஆம் ஆண்டு அதன் புழக்கம் ஏற்கனவே 48,000 வாசகர்களை எட்டியிருந்தது. 1978 வாக்கில், ஆந்திர பிரபாவை ஈநாடு விஞ்சியது, 1995 வாக்கில், மற்ற இரண்டு போட்டியாளர்களான ஆந்திரா பத்ரிக்கா மற்றும் உதயம் ஆகியவை தனது வெளியீட்டை நிறுத்தியது. இதனால் ஈநாடு தெலுங்கு நாளிதழ்களின் புழக்கத்தில் எழுபத்தைந்து சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.

அதன் விரிவாக்கம் அதன் அறிக்கையிடலில் பிராந்திய பேச்சுவழக்குகள், பேச்சுவழக்குகள், பழமொழிகள் மற்றும் கிண்டல் மற்றும் தலைப்புகளுடன் கூடிய வண்ணமயமான படங்களின் பயன்பாடு ஆகியவையும் ஓரளவு காரணமாக இருந்தது. [10]

1975-ல் செய்தித்தாள் ஐதராபாத்தில் விரிவாக்கம் செய்ய நினைத்தது. எனவே நகரத்தை பகுதிகளாகப் பிரித்து, மூன்று மாதங்களுக்கு முன்பே செய்தித்தாள் விநியோகிக்கும் பையன்களை நியமித்து, ஒரு வாரம் இலவசமாக செய்தித்தாளைக் கொடுத்தது. 1980 களில், தொழில்நுட்பம் ஈநாடு முக்கிய நகரங்களைத் தாண்டி பெரிய பகுதிகளில் பரவச் செய்தது. முன்னதாக, 1970 களின் மூன்று பதிப்புகளை (விசாகப்பட்டினம், விசயவாடா மற்றும் ஐதராபாத்து பதிப்புகள்) நிர்வகிப்பது கடினமாக இருந்தது. ஏனெனில் அந்த நேரத்தில் வெளியீட்டிற்கு இருந்த ஒரே தகவல் தொடர்பு வசதிகள் தந்தி, தொலைபேசி மற்றும் தொலை தட்டச்சுப் பொறி ஆகிய அனைத்தும் ஆந்திரப் பிரதேசத்தின் கிராமப்புறங்களில் மட்டுப்படுத்தப்பட்ட இருப்பைக் கொண்டிருந்தன.

ஈநாடு, பின்னர் நிதி மற்றும் சீட்டுக் கட்டுதல்(எ.கா. மார்கதர்சி சிட்ஸ்), உணவுகள் (பிரியா ஃபுட்ஸ்), திரைப்படத் தயாரிப்பு ( உஷாகிரண் மூவிஸ் ), திரைப்பட விநியோகம் (மயூரி பிலிம்ஸ்) மற்றும் தொலைக்காட்சி ( ஈடிவி ) போன்ற பிற வணிகங்களிலும் ராமோஜி குழுமத்தின் கீழ் இறங்கியது..

Remove ads

விநியோகம்

2022 க்கான தணிக்கை பணியகத்தின் அறிக்கையின்படி, ஈநாடு 1,223,862 என்றா அளவில் புழக்கத்தில் உள்ளது. இது இந்தியாவில் தினசரி செய்தித்தாள்களில் 7வது இடத்தில் உள்ளது.[11] 2019 இல், 1,614,105 புழக்கத்தில் அதிகம் புழக்கத்தில் உள்ள இந்திய மொழி நாளிதழ்களில் ஈநாடு எட்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் 24.18% இழப்பு ஏற்பட்டது.

மேற்கோள்கள்

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads