ஈய(II) ஐதராக்சைடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஈய(II) ஐதராக்சைடு (Lead(II) hydroxide) என்பது , Pb(OH)2, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஈயத்தின் ஐதராக்சைடான இச்சேர்மத்தில் ஈயம் +2. என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. இந்த எளிய சேர்மம் இயற்கையில் இருப்பதற்கான வாய்ப்பு தொடர்பாக ஐயமே உள்ளது [5]. ஈய அடிப்படை கார்பனேட்டு (PbCO3•2Pb(OH)2) அல்லது ஈய(II) ஆக்சைடு (PbO) சேர்மங்கள் நடைமுறையில் காணப்படுகின்றன. கடந்த காலத்தில் இச்சேர்மங்களின் இருப்பும் ஈய(II) ஐதராக்சைடு இல்லாமை குறித்த குழப்பங்கள் நிலவின.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு

ஈய(II) உப்புடன் ஓர் ஐதராக்சைடை சேர்க்கும்போது ஒரு நீரேற்றம் பெற்ற ஈய ஆக்சைடு PbO•xH2O ( x < 1) கிடைக்கிறது. ஈய(II) அசிட்டேட்டை கரைசலை கவனத்துடன் நீராற்பகுத்து 6PbO•2H2O = Pb6O4(OH)4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட படிக விளைப்பொருளை தயாரிக்கலாம் [6]. கொத்துச் சேர்மமாக கிடைக்கும் இதில் ஈய மையங்கள் எண்முகத்தில் காணப்படுகின்றன. இவற்றின் ஒவ்வொரு முகத்தின் உச்சியிலும் ஓர் ஆக்சைடு அல்லது ஓர் ஐதராக்சைடு காணப்படுகிறது. எண்முகக் கொத்தின் Mo6S8 கிளை அலகை நினைவூட்டுவதுபோல் இக்கட்டமைப்பு உள்ளது [7].

Remove ads

வினைகள்

கரைசல் நிலையில் ஈய(II) ஐதராக்சைடு கிட்டத்தட்ட ஒரு பலவீனமான அமில நிபந்தனைகளில் இது காரமாக Pb2+ அயனியை உருவாக்குகிறது. இந்த நேர்மின் அயனி நீராற்பகுப்புக்கு உட்படுகிறது. கார நிபந்தனைகள் விருத்தியடைகின்றன. Pb(OH)+, Pb(OH)2 , Pb(OH)3− இனங்கள் உள்ளிட்டவை உருவாகின்றன. மேலும் பலவணு இனங்களான Pb4(OH)44+, Pb3(OH)42+, Pb6O(OH)64+. போன்ற இனங்களும் உருவாகின்றன [6].

ஈய ஐதரேட்டு

கடந்த காலத்தில் ஈய நீரேற்று என்ற பெயர் சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக அறியப்படுகிறது. ஆனால் இச்சொல் Pb(OH)2 அல்லது PbO•xH2O. என்பதில் எதைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது என்பதில் தெளிவில்லை [8][9].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads