ஈ. வெ. கி. சுலோசனாசம்பத்
தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுலேச்சனா சம்பத் (மறைவு:07 சூன் 2015) என்பவர் இதேகா மூத்த தலைவர் ஈ. வெ. கி. சம்பத் மனைவியும், அதிமுகவின் மூத்த தலைவரும் ஆவார். இவரின் மகன் ஈ. வெ. கி. ச. இளங்கோவன் தற்பேதைய தமிழக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் இதேகா தமிழக கமிட்டி தலைவரும் ஆவார். [தொடர்பிழந்த இணைப்பு]
அரசியல் வாழ்க்கை
- எம். ஜி. ஆர் அவர்கள் அதிமுக கட்சி ஆரம்பித்து 1977 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதுக்கு பிறகு தனது அரசியல் சகாவும் பெரியார் வீட்டு பிள்ளை என்று செல்லமாக அழைக்க பெற்ற ஈ. வி. கே. சம்பத் அவர்களை தனது அதிமுக சார்பில் டெல்லி முகமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க நினைத்த போது திரு சம்பத் அவர்கள் எதிர்பாராத மரணத்திற்கு பிறகு முதல்வர் எம்ஜிஆரின் வேண்டுகோளை ஏற்று திருமதி சுலோசனா சம்பத் அவர்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டார் அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
- அதன் பிறகு எம். ஜி. ஆர் முதல்வராக இருந்த போது அவரது ஆட்சியில் இவர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவராகவும் பின், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் நிறுவன தலைவராகவும் தமிழ் நாடு பாடநூல் கழகத் தலைவராகவும் சமூக நல வாரிய உறுப்பினராகவும் இருந்தார்.
- பின்பு முதல்வர் எம். ஜி. ஆர் மறைந்த போது இவர் அதிமுகவில் முதல்வராகும் தகுதியில் மூன்றாவது இடத்தில் இருந்தார்.
- அதன் பிறகு அதிமுகவில் ஜெயலலிதாவின் வருகைக்கு பின் இவருக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக பதவி வழங்கப்பட்டது.
- அதே போல் 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிறை செல்ல நேரிட்ட போது அதிமுகவில் இரண்டாவது இடத்தில் அதாவது முதல்வர் ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலையில் இருந்த போதும் தனக்கு வந்த முதல்வர் பதவியை ஏற்க மறுத்தார்.
- பின்பு முதல்வர் பதவிக்கு திரு. ஒ. பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வராக தேர்வானார்.
- பிறகு கடந்த 2013ல் அப்போதைய அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவிடம் பெரியார் விருது பெற்றார். அப்போது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அவ்விருதை திருமதி. சுலோச்சனா சம்பத்க்கு வழங்கும் போது கட்டி அனைத்து முத்தம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
Remove ads
மறைவு
- 2015ல் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வந்து போது இவர் மறைந்தார்.
- அந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இவர் மறைவிற்கு நேரிலே வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
குறிக்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads