உச்சங்கிப் பாண்டியர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உச்சங்கிப் பாண்டியர் என்பவர்கள் கர்நாடகா மாநிலத்தின் உச்சங்கி துர்க்கா என்னும் கோட்டையை மையமாக வைத்து ஆண்ட சில சிற்றரசர் ஆவார்கள். இவர்கள் தோற்றம் பற்றி உறுதியான தகவல்கள் இல்லை. இவர்கள் தமிழகத்தின் பாண்டியர் குலம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.[1] இவர்களில் நான்கு பாண்டியர்கள் அதிகம் அறியப்படுகிறார்கள். அதில் அவர்கள் தங்களை யாதவர் குலத் தோன்றல்களாய் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள்.[2]
நான்கு அரசர்கள்
இவர்களில் நால்வரின் பெயர் இரு கல்வெட்டுகளில் காணப்படுகிறது.[3]
- திரிபுவண மல்ல பாண்டியத் தேவன்
- முதலாம் விஜய பாண்டியத் தேவன்
- வீர பாண்டியத் தேவன்
- இரண்டாம் விஜய பாண்டியத் தேவன்
நாலாம் விக்ரமாதித்தன் படையெடுப்பு
கி.பி. 1118ல் நாலாம் விக்ரமாதித்த சாளுக்கியன் உச்சங்கி நாட்டைத் தாக்கினான். அவனும் அங்குள்ள உச்சங்கிப் பாண்டியனை திறை செலுத்துமாறு செய்தான்.[4]
இரண்டாம் வீரவல்லாளன் படையெடுப்பு
கி.பி. 1177ல் இரண்டாம் வீரவல்லாளன் என்ற போசள அரசன் உச்சங்கி நாட்டைத் தாக்கினான். அதன் அரசன் வீரபாண்டியத் தேவனையும் அவன் மகன் இரண்டாம் விஜய பாண்டியத் தேவனையும் சிறையில் இட்டான். ஏராளமான உச்சங்கி நாட்டு செல்வங்களை கைப்பற்றிய பிறகு மீண்டும் இரண்டாம் விஜய பாண்டியத் தேவனுக்கே உச்சங்கி நாட்டின் ஆளும் பொறுப்பைக் கொடுத்தான். இரண்டாம் விஜய பாண்டியத் தேவன் வீரவல்லாளனுக்கு திறை செலுத்தி வந்ததால் அவனின் ஆட்சி சில காலம் அங்கு தொடர்ந்தது.
மேற்கோள்களும் குறிப்புகளும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads