உச்சரிப்பு
ஒரு சொல்லைக் குறிக்க ஏற்படுத்தப்படும் ஒலி From Wikipedia, the free encyclopedia
Remove ads
உச்சரிப்பு என்பது ஒரு மொழியை எவ்வாறு பேசுவது அல்லது ஒரு மொழியின் வார்த்தைகளை எவ்வாறு உச்சரிப்பது என்பதாகும். எந்தவொரு மொழியிலும் வார்த்தைகளுக்கென உதடுகள் குவித்து, வாயின் நடுவில் இருந்து தொண்டையிலிருந்து மற்றும் வயிற்றிலிருந்து உருவாக்கும் ஒலிகளே, உச்சரிப்பு அல்லது பலுக்கல் எனப்படும்.[1] ஒரு வார்த்தை பல்வேறு வகைகளில் பல்வேறு பிரிவினரால் உச்சரிக்கப்படுகின்றது. எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்கவில்லையெனில் சொற்களின் பொருள்கள் வேறுபட்டுவிடும். நாம் பேசுவதன் கருத்தைப் பிறர் தெளிவாக உணர்ந்துகொள்ள நாம் சொற்களில் உள்ள எழுத்துக்களைச் சரியாக உச்சரித்தல் அவசியமாகும்.
ஒருவன் ஒரு மொழியை உச்சரிப்பது என்பது அவனுடைய உடல் அமைப்பு, வாழும் சூழல், தட்ப வெட்ப நிலைகள் போன்ற பல காரணிகளைப் பொருத்து வேறுபடும்.
Remove ads
தமிழ் உச்சரிப்பு முன்னேற பங்களித்தவர்கள்
1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும், தமிழறிஞராகவும் இருந்த பா. வே. மாணிக்க நாயக்கர் தமிழ் உச்சரிப்பு (Tamil Phonology) என்னும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நிகழ்த்தியுள்ளார்.[2]
மொழியை உச்சரிப்பதில் உடல் பாகங்களின் பங்கு
ஒலி பிறக்கும் இடங்கள்
- மார்பு
- கழுத்து
- மூக்கு
- ஒட்டுமொத்தத் தலை
ஒலி வெளிப்படும் இடங்கள்
- பல்
- உதடு
- நாக்கு
- அண்ணம்
தொடர்புடைய பணி வாய்ப்புகள்
- பேச்சு மற்றும் உச்சரிப்பு பயிற்சியாளர்
தொடர்புடைய விடயங்கள்
- உதடு படாத சப்தங்களைக்(எ.கா.: க,ங,ச,ஞ, போன்றவை) கொண்ட வார்த்தைகளாலேயே ஆன ராமாயணம் ஒன்றை ஒருத்தர் எழுதியிருக்கிறார். அதற்கு 'நிரோஷ்ட ராமாயணம்'என்று பெயர்.[3]
இவற்றையும் காண்க
உசாத்துனைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads