உஞ்சவிருத்தி பிராமணர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உஞ்சவிருத்தி பிராமணர் என்பவர்கள் பிராமணர்களில் ஒரு பிரிவினர். இவர்கள் தலையில் தலைப்பாகை கட்டி, காலில் சலங்கை கட்டி, இடது தோளில் ஒரு பித்தளைச் செம்பை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டபடி தம்பூராவை மீட்டியபடி சப்ளா கட்டையைத் தட்டி பசனைப்பாடல்களைப் பாடியபடி வீடுவீடாகச் சென்று அரிசி முதலான தானியங்களைத் தானமாகப் பெற்று அதை வீட்டுக்குக் கொண்டுவந்து சமைத்து உண்டு வாழ்பவர்கள் ஆவர்.[1][2] இதில் இன்னொரு பிரிவினர் யாரிடமும் யாசகம் கேட்காமல் அறுவடையான நெல் வயல்களிலில் சிதறிய தானியங்களை சேகரித்துவந்து வைத்து சமைத்து உண்பவர்கள் ஆவர்.[3]

Remove ads
பரவலர் பண்பாட்டில்
சுஜாதா எழுதிய உஞ்சவிருத்தி என்ற சிறுகதை அவரின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்ற சிறுகதை தொகுதியில் இடம்பெற்றுள்ளது.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads