உதவிக்கு வரலாமா
கோகுல கிருஷ்ணன் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உதவிக்கு வரலாமா (Udhavikku Varalaamaa), 1998 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கோகுல கிருஷ்ணன் இயக்கினார். இத்திரைப்படத்தில் கார்த்திக், தேவயானி, சங்கீதா, அஞ்சு அரவிந்த், ஜனகராஜ், பாண்டியன், வடிவுக்கரசி, மணிவண்ணன், கோவை சரளா, ஜெய்கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 16 ஜனவரி 1998 அன்று வெளியான இப்படத்திற்கு இசை அமைத்தவர் சிற்பி ஆவார். இதுவே கோகுல கிருஷ்ணன் இயக்கிய கடைசி திரைப்படம் ஆகும்.
Remove ads
நடிகர்கள்
- கார்த்திக் - முத்துராசு/பிச்சுமணி/ஹுசைன்/பாஸ்டர் ஜேம்ஸ்
- தேவயானி - மைதிலி
- சங்கீதா - ஸ்டெல்லா
- அஞ்சு அரவிந்த் - ஆயிஷா
- ஜனகராஜ் - அண்ணாமலை
- பாண்டியன் - பாலராசு
- வடிவுக்கரசி - முத்துராசுவின் தாய்
- மணிவண்ணன் - மைதிலியின் தந்தை
- கோவை சரளா - மைதிலியின் தாய்
- ஜெய்கணேஷ் - ஆயிஷாவின் தந்தை
- காக்கா ராதாகிருஷ்ணன் - ஹுசைனின் தந்தை
- ஜெ. லலிதா - ஸ்டெல்லாவின் தாய்
- ஷகீலா - கவர்ச்சி நடிகையாக
கதைச்சுருக்கம்
முத்துராசுவின் (கார்த்திக் (தமிழ் நடிகர்)) தாயாருக்கு (வடிவுக்கரசி) உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அதை சரிசெய்யும் அறுவை சிகிச்சைக்கு முத்துராசுவிடம் போதிய பணம் இல்லை. அதனால் நகரத்திற்கு வந்து தேவையான பணம் ஈட்ட முடிவெடுத்து, தன் நகர நண்பனான அண்ணாமலையிடம் (சனகராஜ்) யோசனை கேட்கிறான். அந்நிலையில், மணிவண்ணன், கோவை சரளா என்ற பிராமண தம்பதியின் வீட்டில் குடி வருவதற்காக தான் ஒரு பிராமணன் என்றும், பெயர் பிச்சுமணி என்றும் பொய்களை சொல்லி குடி புகுகிறான் முத்துராசு. அந்த பிராமண தம்பதியின் மகளான மைதிலியும் பிச்சுமணியும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். தாவூத் (ஜெய்கணேஷ்) என்ற முஸ்லிமிடம், வேலையில் சேருவதற்காக தான் ஒரு முஸ்லீம் என்றும், பெயர் ஹுசைன் என்றும் பொய்களை சொல்லி வேலையில் சேருகிறான். அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஹுசைனை காதல் செய்கிறாள்.
இந்த ஆள்மாறாட்ட செயல்களால் பல புதிய சிக்கல்கள் ஏற்பட்டு, வேறு ஒரு சூழ்நிலையில் தான் ஒரு கிறிஸ்டின் பாதிரியார் ஜேம்ஸ் என்று பொய் சொல்லி மேலும் ஒரு ஆள்மாறாட்டம் செய்யவேண்டிய சூழல் முத்துராசுவிற்கு ஏற்படுகிறது. பிறகு, ஸ்டெல்லா என்ற பெண் பாதிரியார் ஜேம்ஸை விரும்புகிறாள். வெகு நாட்கள் ஆகியும் முத்துராசு பணத்துடன் வராததால் அவனது அண்ணன் பால்ராசு (பாண்டியன் (நடிகர்)) அவனை பார்க்க நகரத்திற்கு வருகிறான். இந்த பிரச்சனைகளிலிருந்து எவ்வாறு முத்துராசு தப்பித்தான்? யாரை மணந்தான்? தன் நோயுற்ற தாயை எவ்வாறு காப்பாற்றினான்? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதி கதையாகும்.
Remove ads
இசை
இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் சிற்பி ஆவார். இப்படத்தின் 5 பாடல்களையும் எழுதியவர் பழனி பாரதி.
வரவேற்பு
இந்தோலிங்க்.காம் யின் அரவிந்த், "கதாநாயகன் கார்த்திக் வாயில் இருப்பதை துப்பிவிட்டு வசனத்தை பேசவேண்டும்" என்று விமர்சனம் செய்தார்.[1]
பாலாஜி பாலசுப்ரமணியம், 1.5/5 என்ற மதிப்பெண்ணை தந்தார்.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads