உன்னதமான எண்வகை மார்க்கங்கள்

From Wikipedia, the free encyclopedia

உன்னதமான எண்வகை மார்க்கங்கள்
Remove ads

உன்னதமான எண்வகை மார்க்கங்கள் (பாளி: அரியோ அட்தங்கிகோ மக்கோ, சமசுகிருதம்: ஆர்யஸ்டங்கமார்க்கா)[1] என்பவை வலிந்த மறுபிறப்புச் சுழற்சியான பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலைக்கு வழிவகுக்கும் பௌத்த நடைமுறைகளின் பாதையின் ஆரம்ப சுருக்கம் ஆகும். [2]

Thumb
எட்டு ஆரை தர்மச் சக்கரம் உன்னதமான எண்வகை மார்க்கங்களைக் குறிக்கிறது
விரைவான உண்மைகள் The Noble Eightfold Path மொழிபெயர்ப்புகள், சமசுகிருதம் ...

எண்வகை மார்க்கங்களில் எட்டு நடைமுறைகள் உள்ளன: நல்ல எண்ணம், நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, நல்ல சிந்தனை, மற்றும் நல்ல நோக்கம் (தியானத்தில் முழு ஈடுபாடு அல்லது ஐக்கியம்). ஆரம்பகால புத்தமதத்தில், இந்த நடைமுறைகள் நுண்ணறிவுடன் (நல்ல எண்ணம்) ஆரம்பிக்கப்பட்டு தியானா/சமாதி ஆகியவை துன்பத்தில் இருந்து விடுவிக்கும் முக்கிய நடைமுறைகளாக முடிவடைகிறது. பிற்கால புத்தமதத்தில், நல்ல எண்ணம் (ப்ரஜ்னா) என்பது  துன்பத்தில் இருந்து விடுவிக்கும் முக்கிய நடைமுறையாக கருதப்பட்டு, மார்க்கங்களின் வித்தியாசமான கருத்து மற்றும் கட்டமைப்பிற்கு வழிவகுத்தது.

Remove ads

இதனையும் காண்க

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads