உபதீச நுவாரா இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உபதீச நுவர இராச்சியம் (Kingdom of Upatissa Nuwara) (இதனை விஜிதபுரம் என்றும் அழைப்பர்), விஜயனின் மறைவிற்குப் பின்னர் அவரது அமைச்சராக இருந்த உபதிஸ்ஸன் கிமு 505 இல் உபதீச நுவாரா இராச்சியத்தை நிறுவினார். உபதிஸ்ஸனுக்குப் பின்னர் மன்னர் விஜயனின் நெருங்கிய உறவினரான பண்டுவாசுதேவன் வட இந்தியாவிலிருந்து, இலங்கை வந்து உபதீச நுவாரா இராச்சியத்தின் மன்னரானார்.
வரலாறு
தாமிரபரணி இராச்சியத்திலிருந்து வடக்கே ஏழு அல்லது எட்டு மைல் தொலைவில், தற்கால மன்னார் மாவட்டத்தில் உபதீச நுவாரா இராச்சியம் அமைந்திருந்தது.[1][2][3] இலங்கை மன்னர் விஜயனின் புரோகிதரும், அமைச்சருமான உபதீசன் பெயரில், விஜயனின் மறைவிற்குப் பின் கிமு 505 இல் இவ்விராச்சியம் நிறுவப்பட்டது. இந்த இராச்சியத்தின் தலைநகரம் உபதீச நுவாரா ஆகும். இந்த இராச்சியத்தின் பொறுப்பு மன்னராக உபதீசன் உபதீசன் செயல்பட்டார். பின்னர் மறைந்த மன்னர் விஜயனின் உறவினர்களிடம் இவ்விராச்சியத்தினை ஆளும் பொறுப்பு வழங்கப்பட்டது.
Remove ads
ஆட்சியாளர்கள்
- உபதிஸ்ஸன் = கிமு 505–504
- பண்டுவாசுதேவன் = கிமு 474–454
- அபயன் = கிமு 454–437
- தீசன் = கிமு 437–377
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads