உயிரகச்செதுக்கு

From Wikipedia, the free encyclopedia

உயிரகச்செதுக்கு
Remove ads

இழைய ஆய்வு (biopsy) அல்லது நுள்ளாய்வு அல்லது திசு ஆய்வு என்பது நோய் தாக்கியதாக ஐயுறும் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பதக்கூற்று உயிர்க்கலங்கள் அல்லது இழையங்களில் நோய்நிலையை அறிய அறுவையர் அல்லது கதிரியலாளர் அல்லது இதயவியலாளர் செய்யும் மருத்துவ ஆய்வாகும். இந்த இழையங்கள் ஒரு நோயியலாளரால் நுண்ணோக்கி வழியாக ஆய்வு செய்யப்படுகிறது. இது ஆய்வகத்தில் வேதியியலாகவும் ஆய்வு செய்யப்படும். ஒரு முழு பகுதியோ அல்லது ஐயத்துக்குரிய பகுதியோ வெட்டி நீக்கப்படும் போது அந்த ஆய்வு வெட்டிய இழைய ஆய்வு எனப்படுகிறது. உள்ளுறிஞ்சிய இழைய ஆய்வு அல்லது உள்ளீட்டு இழைய ஆய்வு என்பது இயல்பற்ற பகுதியின் இழையங்களின் முழுப்பகுதியை வெட்டாமல் ஊசிவழி இழையங்கள் அல்லது உயிர்க்கலங்களின் பதக்கூறுமட்டும் எடுத்து செய்யப்படுகிறது. இழைய உயிர்க்கலங்களின் கட்டமைப்பைக் காக்காமல், ஊசியால் இழையம் அல்லது பாய்மம், உறிஞ்சி எடுக்கப்பட்டால், இம்முறை ஊசி உறிஞ்சல் இழைய ஆய்வு எனப்படுகிறது. இழைய ஆய்வுகள் பொதுவாக புற்றுநோயின் தன்மையை மதிப்பிடவோ உட்புரைமையை அல்லது அழற்சிப் பான்மையை மதிப்பிடவோ செய்யப்படுகின்றன.

Thumb
மூளை உயிரகச்செதுக்கு
Remove ads

மருத்துவப் பயன்பாடு

புற்றுநோய்

Thumb
கணினி முப்பருமான வரைவி வழி புற்றுதாக்கியதாக ஐயப்படும் நுரையீரல் இழைய ஆய்வு,.

புற்று தாக்கியுள்ளதாக ஐயப்படும்போது, பலவகை இழைய நுட்பங்களால் ஆய்வுகளைச் செய்து உண்மைநிலையைக் கண்டறியலாம். வெட்டிய இழைய ஆய்வு முழுப் பகுதியையும் நீக்குவதற்கான முயற்சியாகும். கருதப்படும் வெட்டவேண்டிய பகுதி முழுமையாக ஆய்வு மேற்கொண்டு நோயின் தன்மையை அறிந்ததும், வெட்டும் பகுதிக்கு சுற்றியமையும் புற்று தாக்காத அறுவையோரப் பகுதி ஆய்வுக்கு உட்படுத்தி இழைய ஆய்வுப் பகுதிக்கப்பால் நோய் பரவியுள்ளதா என்பது அறியப்படும். "நோயற்ற வரம்பு" அல்லது "எதிர்நிலை வரம்பு" என்றால் இழைய ஆய்வுப் பகுதியின் விளிம்பில் நோய் பரவவில்லை என்பது பொருள். "நேர்நிலை வரம்பு" என்றால் நோய் பரவியுள்ளது என்பது பொருள். அப்போது மேலும் அகலமான பகுதியை வெட்டி நீக்க நேரிடும்.

Remove ads

உயிரிழைய ஆய்விடங்கள்

எலும்பு எலும்பு இழைய ஆய்வு என்பது புற்று, தொற்று, இயல்பற்ற உயிர்க்கலங்கள் ஆய்வுக்காக எலும்புப் பதக்கூறுகளை எடுத்து மருத்துவ ஆய்வு மேற்கொள்வதாகும் .எலும்பு இழைய ஆய்வுக்கு எலும்பின் மேற்பகுதி அடுக்கில் இருந்து பதக்கூற்றை எடுப்பர் ஆனால், எலும்புநல்லி இழைய ஆய்வுக்கு எலும்பின் ஆழ்ந்த உள்பகுதியில் இருந்து பதக்கூற்றை எடுப்பர். அனைத்து வேண்டிய படிமங்கள் எடுத்து ஆய்வு செய்த பின்னரே எலும்புநல்லி இழைய ஆய்வை மேற்கொள்ளவேண்டும். யான்சிதி ஊசிமுறை இழைய ஆய்வு வந்த பிறகு, திறந்த இழைய ஆய்வையும் நுண்ணூசி இழைய ஆய்வையும் பதிலீடு செய்து விட்டது.
எலும்பு மச்சை குருதிக்கலங்கள் எலும்புநல்லியில் உருவாதலால், நேரடிக் குருதிக்கல இழைய ஆய்வில் அறிய முடியாத குருதிக்கலங்களின் இயல்பின்மைகளை அறிய எலும்புநல்லி இழைய ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. வெண்புற்று, நிணநீர்ப் புற்று போன்ற குருதிக்கலப் புற்றுகளைக் கண்டறிய எலும்புநல்லி இழைய ஆய்வு பயன்படுகிறது. நுண்திருக்கியால் குருத்தெலும்புப் படலங்களில் அகட்டுப் பகுதியை வெளியே உறிஞ்சி எடுத்து இழைய ஆய்வு செய்யப்படுகிறது.
இரைப்பைக் குடல் தடம் நெகிழ்தகவு அகநோக்கி மேல், கீழ் இரைப்பைக் குடல் தடத்தை அணுக வழிவகுக்கிறது. எனவே உணவுக் குழல், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றின் இழையப் பதக்கூறுகளை முறையே மலக்குடல், பெருங்குடல், பின்சிறுகுடல் ஈற்றில் இருந்து எடுத்தல் வழக்கமாகி விட்டது. அகநோக்கி வழியாக பலவகை இழையப் பதக்கூறு எடுக்கும் கருவிகளை உள்ளிறக்கி காட்சியில் படும் களத்தில் இழையப் பதக்கூற்றை எடுக்கலாம்.[1] அண்மைவரை, சிறுகுடலின் பெரும்பாலான பகுதிகள் இழையப் பதக்கூறு எடுக்க பார்க்க இயலாமல் உள்ளது. இரட்டைக் குமிழ் தள்ளு-இழு நுட்பத்தால் இப்போது முழு இரைப்பைக் குழல் தடத்தில் அனைத்துப் பகுதிகளையும் கண்டு இழையப் பதக்கூறுகள் எடுக்க முடிகிறது.[2]

இரைப்பை அல்லது முன்சிறுகுடல் வழியாக ஊசியால் கணையத்தில் அகட்டு இழையப் பதக்கூற்றை வெளி உறிஞ்சி எடுக்கலாம்.[3]

நுரையீரல் இருப்பைப் பொறுத்து நுரையீரல் இழையப் பதக்கூறு எடுத்தல் பலவகை முறைகளில் செய்யப்படுகிறது.
கல்லீரல் கல்லீரல் அழற்சியில் எடுக்கப்படும் பெரும்பாலான இழையப் பதக்கூறுகள் நோயறிய பயன்படுவதில்லை. கல்லீரலின் நோய்கள் வேறுவகைகளில் அறியலாம். கல்லிரல் நோய்க்கு மருத்துவம் செய்யும்போது ஏற்படும் துலங்கலை (எதிர்வினையை) கண்டறிய இந்த இழையப் பதக்கூறுகள் உதவுகின்றன. அதாவது, அழற்சி எவ்வளவு குறைகிறது என்பதையும் நாரிழை அழற்சியும் அறுதியாக, கல்லீரல் கரணையும் எவ்வாறு முன்னேறுகிறது என்பதையும் அறிய உதவுகின்றன.

வில்சன் நோயைப் பொறுத்தவரையில், மருத்துவர்கள் கல்லீரல் இழையப் பதக்கூறுகளைச் செம்பளவைத் தீர்மனிக்கவே பயன்படுத்துகின்றனர்.

பராகம் இதில் பராக இழைய ஆய்வு, மலக் குடல் இழைய ஆய்வு, குறுக்குக் கவுட்டி (கரவிட) இழைய ஆய்வு, குறுக்குச் சிறுநீர்க் குழல் இழைய ஆய்வு ஆகியவை அடங்கும்.
நரம்பு மண்டலம் இதில் மூளை இழைய ஆய்வு, நரம்பு இழைய ஆய்வு, மூளையுறை இழைய ஆய்வு ஆகியவை அடங்கும்
சிறுநீர் பிறப்புறுப்பு மண்டலம் இதில் சிறுநீரக இழைய ஆய்வு, கருப்பை அகணி இழைய ஆய்வு, கந்தரக் (கருப்பைக் கழுத்துக்) கூம்பாக்கம் ஆகியவை அடங்கும்.
பிற பிற ஆய்வுக் களங்களாக முலை, நிணநீர் முடிச்சு, தசை, தோல் ஆகியவை அமைகின்றன.
Remove ads

இழைய ஆய்வுப் பொருளின் பகுப்பாய்வு

இழைய ஆய்வு செய்ததும், நோயாளியிடம் இருந்து எடுத்த இழையப் பதக்கூறு நோயியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகிறது. புற்றுநோய் போன்ற நோயறிதலில் வல்லுனராகிய நோயியலாளர் இந்த பதக்கூற்றை நுண்ணோக்கியால் ஆய்வு செய்வார். ஆய்வகம் இழைய பதக்கூற்றை பெற்றதும், அதைப் பதப்படுத்தி மிக நுண்ணிய மென்படலமாக்கி கண்ணாடி வில்லையில் இணைப்பர். எஞ்சும் இழையம் ஆய்வகத்தின் பிற ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும். இந்த இழையப் படலம் உள்ள வில்லையைச் சாயங்களால் கறைப்படுத்துவர். அப்போது ஒவ்வொரு உயிர்க்கலமும் தனித்தனியாக தெளிவாகத் தெரியும். பிறகு, இந்த மென்படலம் நோயியலாளரிடம் தரப்படும். இவர் அதை நுண்ணோக்கியால் ஆய்வு செய்வார். அவர் அதில் கண்ணுற்ற இயல்பற்ற நிலைமைகளையும் நோயின் தன்மையையும் பற்றிய அறிக்கையை உருவாக்குவார். இந்த அறிக்கை முதலில் நோயாளியின்பால் இழைய ஆய்வு செய்த மருத்துவருக்கு அனுப்பப்படும்.

வரலாறு

அராபிய மருத்துவரான அபுல்காசிம் (1013-1107) என்பவர் மருத்துவ ஆய்வறிவுக்கான உயிரிழையத்தை எடுத்தார். இது தைராய்டு சுரப்பிஎனும் கேடயச் சுரப்பியில் ஏற்பட்ட ஒரு கழலையிலிருந்து ஊசியால் குற்றி பெறப்பட்ட உயிரிழையத்துக்கு ஆகும்[4].

சொற்பிறப்பியல்

இழைய ஆய்வு என்ற பொருள்கொண்ட ஆங்கிலச் சொல்லான biopsy எனும் சொல் கிரேக்கச் சொல்லான βίος பயோஸ், "உயிர்," ὄψις ஆப்சிஸ், "காட்சி" எனுமிரண்டு சொற்களால் உருவாக்கப்பட்ட கூட்டுச் சொல்லாகும்.[5]

பிரெஞ்சு தோலியல் வல்லுனராகிய எர்னெசுட்டு பெசுனியர்biopsie என்ற சொல்லை மருத்துவர்களுக்கு 1879 இல் அறிமுகப்படுத்தினார்.[6]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads