உயிர்க்கோளம்

From Wikipedia, the free encyclopedia

உயிர்க்கோளம்
Remove ads

உயிர்க்கோளம் (Biosphere) என்பது உலகளாவிய அனைத்து சூழல் மண்டலங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகும். இதை புவியில் உள்ள உயிர் மண்டலம் என்றும் அழைக்கலாம். உயிர்க்கோளம் (தொழில்நுட்ப ரீதியாக கோள வடிவ ஒரு ஓடு ) என்பது பொருள் சார்ந்து கிட்டத்தட்ட ஒரு மூடிய அமைப்பாகும். இது குறைந்த அளவிலான உள்ளீடுகளையும், வெளியீடுகளையும் கொண்டுள்ளதாக உள்ளது. ஆற்றலைப் பொறுத்தவரை, இது ஒரு திறந்த அமைப்பாக உள்ளது. ஒளிச்சேர்க்கையால் சுமார் 100 வாட்டு விகிதத்தில் சூரிய ஆற்றலைப் பெறுகிறது. [1] பொதுவாக உயிரி அண்டக் கோட்பாடின் வரையறையின்படி, உயிர்க்கோளம் என்பது அனைத்து உயிரினங்களையும் அவற்றிற்கான தொடர்புகளையும் ஒருங்கிணைக்கும் உலகளாவிய சூழலியல் அமைப்பாகும். இதில் கற்கோளம், பனிமண்டலம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகிய கூறுகளுடனான தொடர்பும் அடங்கும். உயிர்க்கோளம் குறைந்தது 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிரிலிவழிப்பிறப்பு என்ற செயல்முறையுடன் தொடங்கி பரிணமித்ததாகக் கூறப்படுகிறது. [2] [3]

Thumb
செப்டம்பர் 2001 முதல் ஆகத்து 2017 வரையிலான உலகளாவிய கடல் மற்றும் நிலப்பரப்பு ஒளித் தன்னூட்டவுயிரி பொய்தோற்ற வண்ணக் கலவை. SeaWiFS திட்டம், நாசா / கோடார்டு விண்வெளி பறப்பு மையம் மற்றும் ஆர்பிமேஜால் வழங்கப்பட்டது.[சான்று தேவை]
Remove ads

இந்தச் சொல்லின் தோற்றமும் பயன்பாடும்

Thumb
பூமியில் ஒரு கடற்கரை காட்சி, ஒரே நேரத்தில் பாறைக்கோளம் (தரை), நீர்க்கோளம் (கடல்), வளிமண்டலம் (காற்று) ஆகியவற்றைக் காட்டுகிறது.

உயிர்க்கோளத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொலான "biosphere" என்ற சொல்லானது 1875 ஆம் ஆண்டில் புவியியலாளர் எட்வார்ட் சூஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர் புவியின் மேற்பரப்பில் வாழும் உயிர்கள் வாழும் இடம் என்று வரையறுத்தார்.

குறுகிய வரையறை

புவி வேதியியலாளர்கள் உயிர்க்கோளத்தை உயிரினங்களின் மொத்தத் தொகை (உயிரியத்தொகுதி அல்லது "உயிரினத்தொகுப்பு" என்று உயிரியலாளர்களும் சூழலியலாளர்களும் குறிப்பிடுகின்றனர்) என்று வரையறுக்கின்றனர். இந்தப் பொருளில், உயிர்க்கோளம் புவி வேதியியல் மாதிரியின் நான்கு தனித்தனி கூறுகளில் ஒன்றாகும், மற்ற மூன்று பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகியவை ஆகும். இந்த நான்கு கூறுகளும் ஒரு அமைப்பாக இணைக்கப்படும்போது, அது சுற்றுச்சூழல் கோளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சொல் 1960 களில் உருவாக்கப்பட்டது, கிரகத்தின் உயிரியல், இயற்பியல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. [4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads