உறுதிக்கோட்டை நகரத்தார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாட்டுக்கோட்டை நகரத்தாரின் பூர்விகம்

நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆதியில் நாக நாடு என்ற பகுதியில் வாழ்ந்து வந்த வைசியர்கள். தொண்டை நாட்டிற்கு வட மேற்கே (தற்போதைய ஆந்திர பிரதேசத்தின் தென்பகுதியில்) இருந்த இந்த நாக நாடு பூகம்பத்தில் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. இங்கிருந்து குடி பெயர்ந்து கீழ்க்கண்ட பகுதிகளில் வாழ்ந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. [1] [2]

  • காஞ்சிபுரம் (தொண்டை நாடு) - கி.மு. 2897 முதல் சுமார் 2100 ஆண்டுகள்
  • காவேரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) (சோழ நாடு) - கி.மு. 789 முதல் சுமார் 1400 ஆண்டுகள்
  • ஓங்காரக்குடி (காரைக்குடி) (பாண்டிய நாடு) - கி. பி. 707 முதல். [3]

இந்த தன வைசியர்கள் முதலில் மூன்று பிரிவாக அதாவது

  1. ஆறு வழியார்
  2. ஏழு வழியார்
  3. நான்கு வழியார்

என்றுதான் இருந்துள்ளனர். மூன்று பிரிவினரும் நாக நாட்டில் இருந்த காலத்திலிருந்தே மரகத விநாயகரை வழிபட்டு வந்துள்ளனர். பாண்டிய நாடு வந்த பின்தான் அரியூரார், இளையாற்றங்குடியார், சுந்தரப்பட்டணத்தார் பரணிடப்பட்டது 2019-11-30 at the வந்தவழி இயந்திரம் என்று அழைக்கப்பட்டனர்.

இளையாற்றங்குடியார் மட்டுமே பின்னர் நாட்டுக்கோட்டை நகரத்தார் என்று அழைக்கப்பட்டனர். அரியூர் பரணிடப்பட்டது 2021-01-29 at the வந்தவழி இயந்திரம் நகரத்தார் வடக்கு வளவு, தெற்கு வளவு மற்றும் நாகர்கோயில் ஏழூர் செட்டி சமூகம் என்று மூன்று பிரிவாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அதே போல் சுந்தரப்பட்டணத்தார் பல்வேறு காரணங்களால் கேரளத்தில் உள்ள கொல்லம் அருகே குடி பெயர்ந்து சென்று விட்டார்கள்.

நகரத்தார் பிரிவினைகள்

கடந்த 1300 வருடங்களில் இது வரை பல பிரிவினைகள் ஏற்பட்டு உள்ளன. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல கூடியவை:

  1. உறுதிக்கோட்டை வட்டகை
  2. முறையூர் நகரத்தார்
  3. ஆத்தங்குடி நகரத்தார்
  4. அருவியூர் நகரத்தார் (வடக்கு வளவு) (சைவம்)
  5. அருவியூர் நகரத்தார் - (தெற்கு வளவு)
  6. அரியூர் - ஏழூர் செட்டி சமூகம்
  7. சுந்தரப்பட்டணத்தார்

இவற்றில் உறுதிக்கோட்டை நகரத்தார் மட்டுமே ஆதாரங்கள் வைத்து உள்ளனர்.[4]

உறுதிக்கோட்டை நகரத்தார் கட்டிய ஓலைச்சுவடி - முதல் பக்கம்
Thumb
ஓலைச்சுவடிகள் - முழு பார்வை
Remove ads

உறுதிக்கோட்டை வட்டகை வரலாறு

இந்த சம்பவம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

நகரத்தார் சம்பந்தமான பிரச்சினைகளை நகரக் கூட்டம் கூட்டி விவாதித்து முடிவு எடுப்பது, பழங்காலம் தொட்டு உள்ள மரபாகும். 12-07-1823 தேதியில் (சித்திரபானு வருடம், ஆனி மாதம் 29-ம் தேதி ) மாத்தூர் அருகே உள்ள உஞ்சனை என்ற ஊரில் 96 ஊர் நகரக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அன்று ஏரியூரைச் சேர்ந்த காக்கா வெள்ளையன் செட்டியார் என்பவர் கூட்டத்திற்கு தாமதமாக வந்துள்ளார். வந்த வேகத்தில் அவர் வந்த குதிரை வண்டி கிளப்பிய தூசி, கூட்டத்தில் இருந்தவர்கள் மேல் பட்டதால் நகரத்தார்கள் கோபம் கொண்டு கூட்டத்தை பாதியில் நிறுத்தி அவரை முதலில் அபராதம் கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்குப் பிறகுதான் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுத்தார்களாம்.[5]

ஆனால் காக்கா வெள்ளையன் செட்டியார் அதற்கு கட்டுப்படாமல் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாது கோபத்தில் வெளியேறி உள்ளார். அவரைச் சேர்ந்த பங்காளிகள் சிலரும், கொள்வினை, கொடுப்பினை செய்தவர்களில் சிலரும் சேர்ந்து ஆக மொத்தம் 104 புள்ளிகள் அவருடன் பிரிந்து சென்றுள்ளார்கள். இவ்வாறு நகர கூட்டத்தை மதிக்காமல் வெளியேறியவர்கள் மீது நகர முறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. கி.பி.1823-ல் பிரிந்ததிலிருந்து இவர்கள் திருமணங்களுக்கு நகரக் கோவில்களிலிருந்து மாலை அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது.[4]

இவ்வாறு பிரிந்தவர்கள் உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் என்ற தலைப்பில் ஓலைச்சுவடியில் ஒரு முறி எழுதி கட்டி இருக்கிறார்கள். (ஓலைச்சுவடிகளின் படங்களை பார்க்கவும்.) அந்த முறியில் கொள்வினை, கொடுப்பினை, நன்மை, புதுமை, சுகசோபன காரியங்கள் எவ்விதம் செய்து கொள்வதென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரிந்து வந்த 104 புள்ளிகளும் மேற்படி முறிப்படி உறுதிக்கோட்டை, திட்டுக்கோட்டை, ஆவரங்குடி, கருங்குளம், பனக்கரை, சருகணி, ஏரியூர், சூரக்குடி ஆகிய ஊர்களில் குடியேறி நாளடைவில் இந்த ஊர்களைக் காலிசெய்து தற்சமயம் குமாரவேலூர், சீனமங்கலம், சண்முகநாதபட்டினம், S.சொக்கநாதபுரம், கருங்குளம், ஆவரங்குடி, ஏரியூர், சூரக்குடி, புதூர் ஆகிய ஊர்களில் இருந்து வருகிறார்கள். ஒன்பது நகரகோவில்களில் நான்கு கோவில்களை (மாத்தூர், வயிரவன் கோவில், பிள்ளையார்பட்டி, இளையாற்றங்குடி) சேர்ந்த நகரத்தார் மட்டுமே இந்த 104 புள்ளிகளில் அடக்கம்.


1.பிள்ளையார்பட்டி கோவில்.

2. மாத்தூர் கோயில்

2.1.அரும்பாக்கூருடையார்

2.2. மணலூர்

2.3 கருப்பூருடையார்

3.இளையாற்றங்குடி கோவில்

3.1ஒக்கூருடையார்

3.2.கழனிவாசக்குடியார்

3.3. பெருமருதூருடையார்

3.4.பட்டினசாமியார் பிரிவு  

3.5 கிங்கினிகூருடையார்

4. வைரவன் கோவில்

4.1 பெரிய வகுப்பு

4.2 தெய்வநாயகர் வகுப்பு

இந்த 104 புள்ளிகளின் வாரிசுகள் இன்று சுமார் 1400 புள்ளிகளாக வளர்ந்து இருக்கிறார்கள். இவர்கள் உறுதிக்கோட்டை வட்டகையைத் தவிர வேறு வட்டகையிலோ, வேறு சமுதாயத்திலோ கொள்வினை, கொடுப்பினை (திருமண உறவுகள்) செய்வது கிடையாது.

Remove ads

ஆதாரங்கள்

புதுவயல், நாச்சாத்தாள் படைப்பு

படைப்பு என்பது பங்காளிகள் சேர்ந்து மூதாதையர்களை நினைத்து சாமி கும்பிடுவதாகும். இந்தப் படைப்பை வயிரவன் கோவிலைச் சேர்ந்த நகரத்தார்கள் ஒவ்வொரு வருடமும் புதுவயலில் நடத்திவருகிறார்கள். கி.பி.1823-லிருந்து உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்கள் பிரிந்து வாழ்ந்தாலும் மேற்படி நாச்சாத்தாள் படைப்பில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்கள்.

Thumb
உறுதிக்கோட்டை நகரத்தார்களுக்கு அழைப்பு

இதற்கு ஆதாரமாக புதுவயலில் இருந்து உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தாரை சேர்ந்த வயிரவன் கோவில் புள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வந்துகொண்டு இருக்கிற அழைப்புகளில் உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தாரை “நமது பங்காளிகள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.[4]

குன்றக்குடி அன்னதான மடம்

குன்றக்குடி அன்னதான மடத்தில் ஒவ்வொரு வருடமும் நகரத்தார்களால் புள்ளி ஒன்றுக்கு விகிதாசாரப்படி வரி வசூல் செய்து, மஹேஸ்வர பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பூஜைக்கு உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்களுக்கும் வருடாவருடம் அழைப்பு வந்து புள்ளி ஒன்றுக்கு விகிதாச்சாரப்படி வரி வசூல் செய்து மேற்படி மகேஸ்வர பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.[6]

உபதேசம் பெறுதல்

நகரத்தார்கள் சாதிமுறை நியாயப்படி ஆண்கள் பாதரக்குடி மடத்திலும், பெண்கள் துலாவூர் மடத்திலும் உபதேசம் கேட்டுக்கொள்ளவேண்டும். அவ்வண்ணமே உறுதிக்கோட்டைவட்டகை நகரத்தார்களும் பெண்கள் துலாவூர் மடாதிபதியிடமும், ஆண்கள் பாதரக்குடி சுவாமி அவர்களிடமும் உபதேசம் பெற்று வருகிறார்கள். இதற்கு ஆதாரமாக 26.09.1976-ல் துலாவூர் மடாதிபதி அவர்கள் T. குமரப்பா அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் பெண்களுக்கு துலாவூர் மடாதிபதியும், ஆண்களுக்கு பாதரக்குடி சாமியார் அவர்களும் தீட்சை நடத்தி வந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.[7]

நகரத்தார் சடங்குகள் & பழக்க வழக்கங்கள்

உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்களுக்கு கோவிலும், கோவில் பிரிவுகளும் உண்டு. புதுமை, கார்த்திகைச்சூப்படி, திருவாதிரை, திருமணம், மகர்நோன்பு, பிள்ளையார் நோன்பு முதலிய சடங்குகளை மற்ற நகரத்தார்களைப் போலவே உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்களும் செய்து வருகின்றனர்.[8] [9]

மேலும் காண்க

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads