உலக நீரிழிவு நாள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உலக நீரிழிவு நாள் (World Diabetes Day) உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் பிறட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே இன்றைய நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது. சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினாலும் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads