உளிதவரு கண்டந்தை
2014 கன்னடத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உளிதவரு கண்டந்தை (கன்னடம்: ಉಳಿದವರು ಕಂಡಂತೆ; தமிழ்: மற்றவர்கள் பார்த்தபடி ) என்பது 2014-ஆம் ஆண்டில் வெளியான ஒரு கன்னட மொழித் திரைப்படமாகும். இத் திரைப்படத்தை எழுதி தயாரித்தவர் புதிய படைப்பாளியான ரட்சித் செட்டி. இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கிசோர், தாரா, அச்சுத் குமார், ரிசாப் செட்டி, ரட்சித் செட்டி மற்றும் யாக்னா செட்டி ஆகியோர். [2] இத் திரைப்படத்தில் ஐந்து கதைத் திரட்டுகள் மூலம் ஒரு கொலை சம்பவத்தை வெவ்வேறு கதாபாத்திரங்களின் கோணத்தில் விவரித்திருக்கின்றார் இயக்குநர். இது கிட்டத்தட்ட பலரால் கொண்டாடப்பட்ட புகழ்பெற்ற ஜப்பானியத் திரைப்படமான ராஷோமோன் போன்றதொரு பாணியை இயக்குநர் பின்பற்றியுள்ளார்.[2][2]
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இத் திரைப்படம் பலரால் பெரிதும் பாராட்டப்பட்டதோடு புகழ்பெற்ற கேண்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. [2] மார்ச் 28, 2014 அன்று திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரட்சித் செட்டியின் நடிப்பு, இயக்கம் ஆகியவையும், சீத்தல் செட்டியின் ஒளிப்பதிவும் அதிக கவனத்தைப் பெற்றன. ஒலி ஒருங்கிணைப்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியாகிய முதல் கன்னடப் படமும் இதுவாகும்.[2] இப்படம் நிவின் பாலி முதன்மைப் பாத்திரத்தை ஏற்று நடிக்க ரிச்சி என்ற பெயரில் தமிழ் மலையாள மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[3][4]
Remove ads
கதை
அரேபிக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி நகரம் மால்பே ஆகும். இது கோயில் நகரமான உடுப்பிக்கு மேற்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. உடுப்பி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் கிருஷ்ண ஜெயந்தி கொண்டும் காலமாகும். அப்போது இளைஞர்களும், குழந்தைகளும் புராணங்களில் உள்ள மாந்தர்களைப் போன்ற ஆடைகளை அணிந்து தெருக்களில் நடக்கிறார்கள். புலிவேடம் வரையப்பட்ட குழுக்கள் நகரத்தை சுற்றி வர பறை இசை ஒலிக்க நடனமாடி வருகின்றனர். ஆனால் இந்த கிருஷ்ண ஜெயந்தியின்போது மால்பேயில் வன்முறை உருவாகிறது. இந்த கிருஷ்ண ஜெயந்தி காலத்தில் நடக்கும் ஒரு கொலை சம்பவத்தை ஆராய்ந்து அதுபற்றி பத்திரிக்கையில் தொடர் எழுத வருகிறாள் செய்தியாளரான ரெஜினா. அவள் ஐந்து வெவ்வேறு நபர்களை சந்திக்கிறாள். அந்த ஐந்து நபர்களின் பார்வையையும் கருத்துக்களையும் விவரிக்கும் வகையில் அந்த ஐந்து நபர்களைச் சுற்றி இந்தப் படம் சுழல்கிறது.
Remove ads
நடிகர்கள்
- ரக்சித் செட்டி - ரிச்சர்ட் 'ரிச்சி' ஆண்டனி
- கிஷோர் - முன்னா
- தாரா - ரத்னக்கா
- அச்சூத் குமார் - பாலு
- ரிஷப் செட்டி - ரகு
- ஷீதாள் ஷெட்டி - ரெஜினா
- யக்னா செட்டி சாரதா
- தினேஷ் மங்களூர் - சங்கர் பூஜாரி
- பி. சுரேஷ் - அப்பா (ரிச்சியின் தந்தை)
- கௌரிஷ் அக்ஸி
- பிரமோத் ஷெட்டி - தினேசா
- ரகு பாண்டேஷ்வர்
- அருண் பிரகாஷ் ஷெட்டி
- மாஸ்டர் சோஹான் - டெமாகரசி
- மாஸ்டர் அக்சே
- மாஸ்டர் லோஹித்
- பேபி காவியா
தயாரிப்பு
உளிதவரு கண்டத்தே படத் தயாரிப்பாளரான ரக்சித் செட்டி ஒரு செவ்வியில் 'தலைமுறைகளுக்கு வரவிருக்கும் ஒரு அனுபவத்தை நான் உருவாக்க விரும்புகிறேன். எனது திரைப்படத்தை மக்கள் தங்கள் இதயத்தில் ஏற்றால் நான் மகிழ்ச்சியடைவேன். " என்றார்.[5]
வளர்ச்சி
உளிதாவாரு கண்டத்தே படத்தின் தயாரிப்புப் பணிகள் 2013 ஆகத்து 1 அன்று தொடங்கப்பட்டது.[6]
சந்தைப்படுத்தல்
இந்த்த் திரைப்படத்தின் முன்னோட்டம் 2013 திசம்பர் 6, அன்று யூடியூபில் வெளியிடப்பட்டது.[7] இது வெளியிடப்பட்ட 48 மணி நேரத்திற்குள் 44,618 முறை பார்க்கப்பட்டது, இது இதற்கு முந்தைய சிம்பிள் அகி ஓந்து லவ் ஸ்டோரி என்ற கன்னடப் படத்தின் முன்னோட்டத்தை முறித்தது. அடுத்த நாள் படத்தின் முன்னோட்டமானது கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரால், பெங்களுரில் உள்ள திரிவேணி திரையரங்கில் வெளியிடப்பட்டது.[8][9] நடிகர் யோகேஷ் குறிப்பிடும்போது உளிதவாரு கண்டத்தே படத்துக்காக தனது அடுத்த திரைப்பட வெளியீட்டை ஒத்திவைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.[10]
படம் குறித்து முகநூல் [11] மற்றும் டிவிட்டர்,[12] ஆகியவற்றில் பெருமளவு மீம்ஸ்கள் பரவின. இயக்குநர் ரக்சித் செட்டி, முன்னோட்ட வெளியீட்டிற்குப் பிறகு படத்தை பிரபலப்படுத்தும் பணியில் மூழ்கினார், திரைப்படத்தின் விளம்பரத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட டி-சட்டைகளை வடிவமைப்பதிலும், அதில் பட முன்னோட்டத்தில் பாத்திரங்கள் வாயிலாக இடம்பெற்ற தனித்தன்மையான வசனங்களையும், படங்களையும் இட்டு வடிவமைத்தனர். இதுபோன்று படத்தை வெளியீடுவதற்கு முன்பாக பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ரசிகர்-தளத்தையும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
Remove ads
வெளியீடு
இந்தப் படத்துக்கு பிராந்திய தணிக்கை வாரியம் "யு / ஏ" (பெற்றோர் வழிகாட்டலுடன் பார்கலாம்) சான்றிதழ் வழங்கப்பட்டது. தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளில் இடம்பெற்ற ஒரு சில மோசமான சொற்களைக் கேட்ட இயலாமல் மௌனமாக்கப்படு முடக்கப்பட்டது. இது தவிர, புகைபிடிக்கும் காட்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.[13] இதைத் தொடர்ந்து, 2014 மார்ச் 28 அன்று கர்நாடகம் முழுவதும் 100 திரையரங்குகளிலும், அமெரிக்காவிலும், நியூசிலாந்திலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.[14]
Remove ads
வசூல்
வெளியான முதல் வாரத்தில் நல்ல வசூலாக 20 கோடி ரூபாய் (3.1 மில்லியன் அமெரிக்க டாலர்) வசூல் ஈட்டியது. இரண்டாவது வாரத்தில் வசூல் குறைந்தது, என்றாலும் இது பாக்ஸ் ஆபிசில் சராசரியாக வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads