உழவியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உழவியல் (Agronomy) என்பது பயிர் விளைச்சல் சார்ந்த அறிவியலும் தொழில்நுட்பமும் ஆகும். இது உணவு, எரிபொருள், நாரிழை, ஆகியவற்றுக்காக நிலத்தைப் பண்படுத்தி உழுது பயர்விலைச்சலைச் செய்கிறது. இந்நிகழ்வினூடே இது நிலத்தை மீட்டு பேணுகிறது. உழவியல் தாவர் மரபியல், தாவர உடலியங்கியல், வானிலையியல், மண் அறிவியல் ஆகிய புலங்களின் அறிவைப் பயன்கொள்கிறது. இது உயிரியல், வேதியியல், பொருளியல், சூழலியல், புவி அறிவியல், மரபியல் ஆகிய அறிவியல் புலங்களின் கூட்டுப் பயன்பாட்டுத் துறையாகும். தர்கால உழவியலாளர்கள் உணவு விலைவித்தல், நலமான உணவுக்கு உறுதி வழங்கல், வேளண்மை தரும் சுற்றுச்சூழல் தாக்கங்களைச் சமன் செய்தல், தாவர ஆற்றலைப் பயன்படுத்தல் போன்ற பல நடைமுறைச் சிக்கல்களைச் சந்திக்கின்றனர்.[1] உழவியலாளர்கள் பயிர்ச்சுழற்சி, பாசனம், நீர் வடிகால், தாவர் வளர்ப்பினம் உருவாக்கல், தாவர உடலியக்கம், மண் வகைபாடு, மண்வளம், களைக் கட்டுபாடு, பூச்சி, தீங்குயிர்க் கட்டுபாடு ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெறுகின்றனர்.

Remove ads
தாவர வளர்ப்பின உருவாக்கம்

உழவிய்ல் புலம் பல்வேறு நிலைமைகளில் பயந்தரும் நல்ல பயிர்களை உருவாக்க தாவரங்களில் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்தைப் பயன்படுத்துகிறது. தாவரத் தெரிவின வளர்ப்பு பயிர் விளைச்சலைக் கூட்டுகிறது; கோதுமை, மக்காச்சோளம், சோயா அவரை ஆகியவற்றின் ஊட்டச் சத்தை மேம்படுத்துகிறது. புதிய ப்யிர்களை உருவாக்குகிறது. குறிப்பாக புல்லரிசியையும் கோதுமையையும் கலந்து உருவாக்கிய டிரிட்டிக்கேல் எனும் பயிரினம் உருவாக்கப்பட்டது. இப்பயிரினத்தில் பயன்மிகு புரதம் புல்லரிசி, கோதுமையை விடக் கூடுதலாகக் கிடைக்கிறது. பழம், காய்கறி விளைச்சல் சார்ந்த ஆராய்ச்சியிலும் உழவியல் பெரும்பங்கு வகிக்கிறது.
Remove ads
உயிரித் தொழில்நுட்பம்


உழவியலாளர் பயிரின் குறிப்பிட்ட பான்மைகளைப் பெற உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்.[2] ஊயிரித் தொழில்நுட்பம் ஆய்வகச் செயல்பாடாகும். உருவாக்கிய புதிய பயிரின வகைகள் பின்னர் கள ஆய்வுக்கு ஆட்படுத்தப்படுகின்றன.
உழவியல் உயிரித் தொழில்நுட்பம் பயிர்விளைச்சலைக் கூட்டப் பயன்படுவதோடு உணவல்லாத பிற பய்ன்பாடுகளுக்கும் பயன்படுகிறது. எடுத்துகாட்டாக, எண்ணெய்க்காகப் பயன்படும் எண்ணெய்வித்துக்களைத் திருத்திக் கொழுப்பு அமிலம் செய்யவும் மாற்று எரிபொருள்களைச் செய்யவும் பாறைவேதிப் பொருள்களை ஆக்கவும் உயிரித் தொழில்நுட்பம் பயன்படுகிறது.
Remove ads
மண் அறிவியல்
உலகமெங்கும் உழவியலாளர்கள் மண்வளத்தைப் பெருக்கி விளைச்சலைப் பெருக்கும் நீடிப்புதிற வழிமுறைகளைகுருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மண்ணை வகைப்படுத்தி குறிப்பிட்ட மண்வகைமை கருதும் தாவர வளர்ச்சிக்கு ஏற்றதாவெனப் பகுப்பாய்வு செய்கின்றனர். பகுப்பாய்வு மண்ணில் உள்ள பொதுவான பேரூட்டங்களான காலகம், அவிர்வம், பொட்டசியம், கால்சியம், மகனீசியம், கந்தகம் ஆகியவற்றின் விகிதங்களைக் காண்கிறது. மண் பகுப்பாய்வு மேலும் சிற்றூட்டங்களன துத்தநாகம், போரான் ஆகியவற்ரின் விகிதங்களையும் அறிய முயல்கிறது. மேலும் கரிமப் பொருள் விகிதம், மண் அமிலக் காரத் தன்மை, உட்டம் ஏந்துதிறம், ( எதிர்மின்னணு பரிமாற்றத் திரம்) ஆகியனவும் வட்டார ஆய்வகத்தில் ஓர்வுக்கு உட்படுத்தப்படும். இவ்வகை ஆய்வக அறிக்கைகளை உழவியலாளர்கள் பகுத்தாய்ந்து, கருதும் பயிர்வகைக்கு ஏற்றபடி மண்ணை வளப்படுத்துவதற்கான உகந்த பரிந்துரைகளைச் செய்வர்.[3]
மண்வளம் பேணுதல்
மேலும் உழவியலாளர்கள் மண்ணிருப்பைப் பேனவும் காற்றாலும் நீராலும் ஏற்படும் அரிமானத்தைக் குறைக்கவும் வேண்டிய முறைகளையும் உருவாக்குகின்றனர். எடுத்துகாட்டாக, மண் அரிமானத்தைத் தவிர்க்கவும் மழைபொழிவைத் தேக்கவும் படியடுக்கு உழுதலைப் பயன்படுத்துவர்.மேலும், உழவியல் ஆய்வாளர்கள் மாந்த, விலங்கு உரம், நீர்மாசுறல், மண்ணில் திரளும் தீங்குயிர்கொல்லி, களைக்கொல்லி, ஆகிய சிக்கல்களில் இருந்து மண்ணைக் காக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து மண்வளத்தைத் திறம்படப் பயன்கொள்ள வழிவகுப்பர். உழாத பயிர்விளைச்சலில் மண்ணை கட்டிப் பிணைக்கும் புல்வெளி மேலாண்மையை படியடுக்குகளில் மேற்கொள்வர். ஒரு மீட்டர் ஆழ நீர் வடிகாலையும் அமைப்பர்.[சான்று தேவை]
வேளாண்சூழலியல்
வேளாண்சூழலியல் என்பது சூழலியல், சுற்றுச்சூழலீயல் கண்ணோட்டத்துக்கு ஏற்ப வேளாண் அமைப்புகளை மேலாண்மை செய்தலாகும்.[4] இப்புலம் பேண்தகு வேளாண்மை, இயற்கை வேளாண்மை, மாற்று உணவு முறைகள், மாற்று பயிரிடு முறைகளை உருவாக்கல் ஆகிய புலங்களோடு மிக நெருக்கமான உறவுள்ளதாகும்.
கோட்பாட்டு படிமமாக்கம்
கோட்பாட்டுநிலை பயிர்விளைச்சல் சூழலியல் பயிர்களின் வளர்ச்சியை அளவியலாக ஆய்வு செய்கிறது. தாவரம் ஓர் உயிரியல் தொழிலகமாகக் கருதப்படுகிறது. இந்தத் தொழிலகம் ஒளி, கரிம ஈராக்சைடு, நீர், தாவர ஊட்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அறுவடைப் பொருள்களாக மாற்றுகிறது. இந்நிகழ்வில் செயற்படும் முதன்மை அளவுருக்களாக வெப்பநிலை, சூரிய ஒளி, நடப்பு பயிர் உயிர்ப்பொதி, பயிர் விளைச்சல் பரவல்லூட்டம், நீர் வழங்கல் ஆகியன அமைகின்றன.[சான்று தேவை]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
நூல்தொகை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads