ஊகிடோலா

இந்தியாவின் ஒடிசாவில் உள்ள ஒரு தீவு From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஊகிடோலா விரிகுடா மற்றும் ஊகிடோலா தீவு (Hukitola Bay and Hukitola Island) இரண்டும் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மகாநதி டெல்டாவின் வடக்கே அமைந்துள்ளன.[1] வண்டல் மண் படிவுகளிலிருந்து ஊகிடோலா தீவு உருவானது. தீவில் ஒரு கட்டிடம் உள்ளது. பிரித்தானிய குடியேற்றக்காரர்களால் சுமார் 1867 ஆம் ஆண்டில் அரிசியை சேமித்து வகைக்கும் களஞ்சியமாக இக்கட்டிடம் கட்டப்பட்டது.[2] கட்டிடம் 7,000 சதுர அடிக்கும் அதிகமான மொத்த தரைப் பரப்பளவைக் கொண்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு அமைப்புகளுடன் பிரித்தானிய கட்டிடக்கலையின் திறமைக்கான ஒரு சான்றாக இக்கட்டிடம் திகழ்கிறது.[3]

2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒடிசா மாநில தொல்லியல் துறையால் இக்கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. ஒரு சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கமே இப்புதுப்பித்தலுக்கான காரணமாகும்.[4]

பார்வையிடுவது எப்படி:

முதலில் ஒடிசாவின் தலைநகரான புவனேசுவரை அடைய வேண்டும். புவனேசுவரில் இருந்து, இயம்புவிற்கு நேரடியாக பேருந்து வசதியைப் பெறலாம். ஆனால் பேருந்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். து வாடகை வண்டியையும் வாடகைக்கு எடுக்கும் வசதியும் உள்ளது. இயம்பு புவனேசுவரில் இருந்து 121 கிமீ தொலைவில் உள்ளது. இயம்புவை அடைந்ததும் ஒரு படகை வாடகைக்கு எடுக்க வேண்டும். சதுப்புநிலக் காடுகள் வழியாக படகில் மிதந்து, பின்னர் கடலுக்குச் சென்று நாம் ஊகிடோலாவை அடையலாம்.

Remove ads

காட்சியகம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads