ஊடுகதிரியல்

From Wikipedia, the free encyclopedia

ஊடுகதிரியல்
Remove ads

ஊடுகதிரியல் (Radiology) மனித உடலை காட்சிப்படுத்தும் படிமவியலை நோய்களை அறியவும் அவற்றை குணப்படுத்தவும் பயன்படுத்தும் ஓர் மருத்துவ சிறப்பியலாகும். ஊடுகதிரியலாளர்கள் பலதரப்பட்ட படிமத் தொழில்நுட்பங்களை (ஊடுகதிர் அலை , மீயொலி, கணித்த குறுக்குவெட்டு வரைவி (CT), அணுக்கதிர் மருத்துவம், பொசிட்ரான் உமிழ்வு குறுக்குவெட்டு வரைவி (PET) மற்றும் காந்த அதிர்வு அலை வரைவு (MRI) போன்றவை) நோயைக் கண்டறியவும் குணப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். தடுப்பு ஊடுகதிரியல் என்பது படிமத் தொழில்நுட்பங்களின் வழிகாட்டுதலில் மிகக் குறைந்த ஊடுருவு அறுவை சிகிட்சைகளை மேற்கொள்ளுதலாகும். மருத்துவப் படிமங்கள் எடுப்பதை வழமையாக ஓர் ஊடுகதிர் தொழில்நுட்வியலாளர் அல்லது ஊடுகதிர் வரைவாளர் மேற்கொள்கிறார்.

Thumb
கலிபோர்னியாவின் சான் டியாகோவில் ஓர் ஊடுகதிரியலாளர் நவீன ஒளிப்பட காப்பகம் மற்றும் தொடர்பு அமைப்பு (PACS) கணினியில் மருத்துவப் படிமங்களை ஆராய்தல்.
Dr. Macintyre's X-Ray Film (1896)
Remove ads

மருத்துவப் படிமங்களைப் பெறுதல்

படத்தாள்

படத்தாள் (x-ray film), எக்சுகதிர் படம் பதிவு செய்ய பயன்படும் ஓர் ஊடகமாகும். முன்னாட்களில் இது செல்லுலோசு டிரை அசடேட்டு எனும் எக்சு கதிர்களுக்கு அதிக உணர்திறனுடைய குழம்பால் அடிபாகத்தில் பூசப்பட்டு இருந்தது. இது மிகவும் சீராக பூசப்பட்டு அதில் சிராய்ப்புகள் ஏற்படதவாறு காப்பு கூ.ழ்மம் பூசப்பட்டுள்ளது. அடிப்பாகத்தின் இரு பக்கமும் இத்தகையப் பூச்சுயுள்ளது. இப்படிப்பட்ட எக்சு கதிர் படத்தாள் நீல வண்ணத்திற்கு அதிக உணர்திறனுள்ளவையாகும். இப்படிப்பட்ட படத்தாள் சாதாரண ஒளிப்படத் தாளிலிருந்து அதிக மாறுபட்டதல்ல.

ஊடுகதிர் ஒளிப்படம்

உடனொளிர்சாய ஊடுகதிர் ஒளிப்படம்

தடுப்பு ஊடுகதிரியல்

வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைபடம்

மீயொலி படிமவியல்

காந்த அதிர்வு அலை வரைபடம்

கதிரியக்க மருத்துவம்

தொலை கதிரியல்

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads