ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோயில்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், ஊட்டத்தூர் ஊராட்சியில் உள்ள தொன்மையான சிவபெருமான் திருக்கோயில் ஆகும். இக்கோயில் பாடாலூர் ஊராட்சி அருகே, திருச்சியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முற்கால சோழர்களால் கட்டபட்டது. பின்னர் ராஜராஜசோழ மன்னரால் சீரமைக்கப்பட்ட பழைமையான தேவார வைப்புத் தலம். சோழ மன்னர்கள், விஜய நகர, பாண்டிய மன்னர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்ட திருக்கோயில். இத்திருக்கோயில் பற்றி அப்பர் பாடிய திருப்பாடல்கள், க்ஷேத்திரக்கோவை-திருத்தாண்டகம் பாடல்கள் குறிப்பிடுகின்றன.[3][4]
Remove ads
தலவரலாறு
ஊட்டத்தூரின் மேற்கே உள்ள சோளேஸ்வரம் எனும் கோயிலை அமைத்த ராஜராஜ சோழன் அடிக்கடி அப்பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்த சமயம் ஒருமுறை மன்னர் வருகைக்காகப் பாதையைச் சரிசெய்யும் பணியில் மண்வெட்டியால் புல் செதுக்கும் பொழுது ஓரிடத்தில் இரத்தம் வரவே, இச்செய்தி மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது. மன்னர் வந்து சோதித்து சிவலிங்கத்தைக் கண்டு, மன்னிக்க வேண்டி அவருக்கு திருக்கோயில் எழுப்பினார். மூலவர் சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் மண்வெட்டி வடு உள்ளது.[5]
நந்தி ஆறு
புண்ணியநதிகள் தம்முள் எவர் பெரியவர் என்ற போட்டியில் சிவபெருமானிடம் தீர்ப்புக்கு வர, நந்தியை அழைத்து அனைத்து நதிகளையும் குடித்துவிடும் படியும் எந்த நதியைக் குடிக்கமுடியவில்லையோ அதுவே சிறந்தது எனக்கூற, நந்தியெம்பெருமானால் கங்கையைக் குடிக்க முடியாததால் அதுவே சிறந்தது எனத் தீர்ப்பாயிற்று. தாம் குடித்த நதிகளை எல்லாம் வெளியே நந்தியெம்பெருமான் வெளியே விட, அதுவே நந்தி ஆறு என ஆயிற்று.[1]
Remove ads
ராஜகோபுரம்
ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது.
தேவார வைப்புத் தலம்
அப்பர் பெருமான் பாடலூரிலிருந்து ஊட்டத்தூர் சிவபெருமானைப் பாடியுள்ளார்.
பஞ்சநதனக்கல் நடராஜர்
பஞ்சநதனக்கல் எனும் அரிய வகைக் கல்லில் செய்யப்பட்ட எட்டு அடி உயர நடராஜப்பெருமான் சிலை வழிபாட்டில் உள்ளது.[1]
சிறப்பு
கட்டடக்கலை சிறப்பு
வருடந்தோறும் தமிழ் மாசி மாதம் 12,13,14 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவபெருமான் மீது விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.[1]
நோய்தீர்க்கும் தீர்த்தம்
பஞ்சநதனக்கல்லுக்கு மருத்துவச் சிறப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பஞ்சநதனக்கல் நடராஜருக்கு வெட்டிவேர் மாலையிட்டுப் பின்னர் அம்மாலையைப் பிரம்ம தீர்த்தத்தில் போட்டு அந்த தீர்த்தத்தைப் பருக சிறுநீரகக்கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.[6]
Remove ads
முள் படுகளம்
வருடந்தோறும் முள் படுகளம் எனும் இருபதுக்கும் மேலான கிராம மக்கள் பங்கு பெறும் திருவிழா இத்திருத்தலத்தில் நடைபெறுகின்றது.
திருட்டு
2011 ஆம் வருடம் இத்திருவிழா சமயம் இத்திருக்கோயிலின் மூன்று வெண்கலச் சிலைகள் திருடு போயின.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads