ஊர் நகரின் பதாகை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊர் நகரின் பதாகை என்பது, இன்றைய ஈராக்கின் பாக்தாத் நகருக்குத் தெற்கில் பண்டைய கீழ் மெசொப்பொத்தேமியாவில் உள்ள ஊர் நகர அரச குடும்பத்தின் இடுகாட்டுப் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு சுமேரியக் காலத்திய தொல்பொருள் ஆகும். இது ஏறத்தாழ 4,500 ஆண்டுகள் பழமையானது.
அத்துடன், இது இதன் பக்கங்களில் போர் மற்றும் அமைதி தொடர்பான காட்சிகள் சித்திரவடிவாக அமைக்கப்பட்டுள்ள ஒரு பெட்டி வடிவில் இருந்திருக்கக்கூடும். இதைக் கண்டுபிடித்தவர் இதை ஒரு பதாகை என விளக்கியபோதும் இதன் பயன்பாடு என்ன என்பது மர்மமாகவே உள்ளது. இது அரச குடும்பத்துக் கல்லறை ஒன்றில் சடங்கு முறையில் பலியிடப்பட்ட மனிதனொருவனின் எலும்புக்கூட்டுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. இம்மனிதன் இதைக் காவல் காப்பவனாக இருக்கக்கூடும். இது திருத்தியமைக்கப்பட்ட வடிவில் இப்போது இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.
Remove ads
வரலாறு
இத்தொல்பொருள் ஊர் நகரிலுள்ள மிகப்பெரிய அரச கல்லறைகளுள் ஒன்றும், கிமு 2550ல் இறந்த ஊர்-பபில்சாக் என்னும் ஊர் வம்ச அரசனுடன் தொடர்புடைய தொல்லியல் மேட்டை அகழாய்வு செய்கையில் கண்டெடுக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads