ஊழலுக்கு எதிரான இந்தியா (இயக்கம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption, IAC) இந்தியாவில் ஊழலுக்கு எதிரான அமைப்புகளில் முழுமையான மாற்றங்களைக் கோரும் ஓர் மக்கள் இயக்கமாகும். ஜன் லோக்பால் மசோதாவை [1] இந்திய அரசு சட்டமாக்கிட வேண்டுமென்று கட்டாயப்படுத்த பல சிறப்புமிகு குடிமக்கள் ஒன்றுசேர்ந்துள்ளனர். இந்த இயக்கத்தில் பல சமயத் தலைவர்கள், தகவல் பெறும் உரிமை போராளிகள், சமூக சிந்தனையாளர்கள் மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் இணைந்துள்ளனர்.[2][3][4]
Remove ads
ஊழலுக்கு எதிரான உத்தி
ஆங்காங்கின் ஊழலுக்கு எதிரான தன்னிச்சை ஆணையத்தினால் (Independent Commission Against Corruption)[5] தூண்டப்பட்டு அதனைப்போன்ற ஜன் லோக்பால் சட்டமுன்வரைவு ஒன்றினை இந்த இயக்கதினர் தயாரித்துள்ளனர். இந்த சட்ட முன்வரைவு வலுவான, திறனான, அரசியலில் இருந்து விடுபட்ட இரு அமைப்புகளாக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா உருவாக்கப்படவும், அவை பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை புலனாய்வு செய்யவும் வழி செய்கிறது. மேலும் குறிப்பிட்ட காலவரைக்குள் குறை நீக்கலும் புலனாய்வு முடிவு பெறவும் வழி செய்கிறது.
Remove ads
அன்னா அசாரேயின் பங்காற்றல்
சமூக சேவகர் அன்னா அசாரே ஜன் லோக்பால் சட்ட முன்வரைவை அமலாக்கக்கோரி 5 ஏப்ரல்,2011 முதல் காலவரையற்ற உண்ணாநோன்பில் இருந்தார். நான்கு நாட்களில் அவரது போராட்டத்திற்கு குவிந்த மக்கள் ஆதரவின் பின்னணியில் ஒன்றிய அரசு தான் சட்டமாக்கவிருக்கும் லோக்பால் சட்டமுன்வரைவிற்கு மாற்றாக வைக்கப்படும் ஜன் லோக்பால் வரைவை விவாதித்து ஓர் இணக்கமான சட்டமுன்வரைவை மழைக்கால நாடாளுமன்றத் தொடருக்கு முன்னர் வழங்கிட மக்கள் பிரதிநிதிகள், அரசுத் தரப்பு பிரதிநிதிகளைக் கொண்ட 10 பேர் அடங்கிய கூட்டுக் குழு அமைக்க அதிகாரபூர்வ அரசாணையை வெளியிட்டதையடுத்து தனது உண்ணாநோன்பை ஏப்ரல் 9, 2011 அன்று முடித்துக் கொண்டார்.[6]
" மக்களால் இயற்றப்பட்ட ஜன் லோக்பால் அல்லது லோக் ஆயுக்தா சட்ட முன்வரைவினை சட்டமாக்காத ஒன்றிய அரசிலோ மாநில அரசிலோ பதவியில் உள்ள எந்தக் கட்சிக்கும் நான் வாக்களிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்."
இந்திய வாக்களிப்பு உறுதிமொழி
Remove ads
ஊழலுக்கு எதிரான வாக்கு வங்கி
ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம் ஊழலுக்கு எதிரான வாக்குவங்கி ஒன்றையும் நிறுவ முயன்று வருகிறது[7]. இந்திய குடிமக்களை தங்கள் இணையதளத்தில் பதிந்து லோக்பால் சட்டமாக்காத எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டேன் என்ற உறுதிமொழி எடுக்க வேண்டுகின்றனர்.
அரசியல் ஆதரவு
ஜன் லோக்பால் சட்ட வரைவிற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவளித்துள்ளன. இடது முன்னணியைச் சேர்ந்த சுதாகர் ரெட்டி, ஏ பி பிரதான், அபனி ராய் ஆகியோரும் ஜனதா தளம் (எஸ்) எச் டி தேவகௌடா, தெலுங்கு தேசத்தின் மைசூரா ரெட்டி, இராட்டிரிய லோக் தளத்தின் ஜயந்த் சௌதரி ஆகியோரும் ஆதரவு தெரிவிக்கும் கையெழுத்திட்ட கூட்டறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளனர்.[8]
இந்த இயக்கத்தில் பங்குபெறும் சிறப்புமிகு குடிமக்கள்
- அண்ணா அசாரே
- கிரண் பேடி
- பாபா ராம்தேவ்
- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
- மெகமூத் மதானி
- பேராயர் வின்சென்ட் எம் கன்செஸ்ஸௌ
- சுவாமி அக்னிவேஷ்
- சைய்யது ரிஸ்வி
- அதுல் கௌசால்
- ம்படி ஷமூன் காஸ்மி
- மல்லிகா சாராபாய்
- நீதியரசர் டி எஸ் டேவடியா
- பிரதீப் குப்தா
- அர்விந்த் கேஜ்ரிவால்
- கமல் காந்த் ஜஸ்வால்
- மேதா பட்கர்
- சுனிதா கோதரா
- பி ஆர் லல்லா
- தேவிந்தர் சர்மா
- சுபாஷ் சந்திர அகர்வால்
- விசுவாஸ் உதாகி
- சாயேத் ஷா ஃபசுலுர் ரஹ்மான் வைசி
- சாந்தி பூசண்
- பிரசாந்த் பூசண்
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads