எகிப்திய இசுலாமியப் போராட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எகிப்திய இசுலாம் போராட்டம் அல்லது எகிப்திய இசுலாமிய ஜிகாத் (Egyptian Islamic Jihad, அரபி: الجهاد الإسلامي المصري) (EIJ), துவக்கத்தில் எளிமையாக இசுலாமிய ஜிகாத் (الجهاد الإسلامي மற்றும் புனிதத்தலங்களுக்கான விடுதலைப் படை (Liberation Army for Holy Sites)[1]என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்ற இந்த இயக்கம் எகிப்த்தின் இசுலாமிய அடிப்படைவாதிகளால் 1970களிலிருந்து இயங்கி வருகிறது. இவர்களை "அல்-ஜிகாத்," "ஜிகாத் குழு", அல்லது "ஜிகாத் அமைப்பு",[2] என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.இக்குழு அல் கைடாவின் கூட்டாளி என்று ஐ.நாவால் உலகளவில் தடை செய்யப்பட்டுள்ளது.[3] தவிர பல நாட்டு அரசுகளும் தனிப்பட்ட நிலையில் இந்த இயக்கத்தை தடை செய்துள்ளன.[4] 1991ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கத்திற்கு தலைவராக அய்மன் அல் ஸவாஹிரி இருந்து வருகிறார்.
இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாக எகிப்திய அரசை வெளியேற்றி இசுலாமிய சட்டங்களுட்பட்ட அரசை நிறுவுவதாக இருந்தது. பின்னர் இது எகிப்து மற்றும் பிற நாடுகளில் உள்ள ஐக்கிய அமெரிக்கா மற்றும் இசுரேல் அமைப்புகளை தாக்குமாறு விரிவாக்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் போராளிகள் உலகளவில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதால் முடங்கியுள்ளது. சூன் 2001 அன்று பல ஆண்டுகளாகவே ஒருங்கிணைந்து செயலாற்றிய அல் காயிதாவுடன் இணைந்து "காயிதா அல் ஜிகாத்"[5] என அழைக்கப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
மேற்படிப்பிற்கு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads