எக்குவடோர் தேசிய காற்பந்து அணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எக்குவடோரிய தேசிய கால்பந்து அணி (Ecuadorian national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் எக்குவடோர் நாட்டின் சார்பாகப் பங்குபெறும் அணியாகும். இதனை எக்குவடோரிய கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது.
எக்குவடோர் மூன்று உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது (2002, 2006 மற்றும் 2014). உலகக்கோப்பையில் இவ்வணியின் சிறந்த செயல்பாடு, 2006-இல் 16-அணிகள் சுற்றை எட்டியதாகும்; அச்சுற்றில் இங்கிலாந்திடம் தோற்று, போட்டியிலிருந்து வெளியேறியது. தென்னமெரிக்கக் காற்பந்துக் கூட்டமைப்பின் கோப்பையான கோபா அமெரிக்காவை வெல்லாத மூன்று தேசிய அணிகளில் இதுவும் ஒன்றாகும்; மற்றவை சிலி மற்றும் வெனிசுவேலா ஆகியவையாகும். அப்போட்டியில் இவ்வணியின் சிறந்த செயல்பாடு 1959 மற்றும் 1993-ஆம் ஆண்டுகளில் நான்காம் இடம் பெற்றது ஆகும்; அவ்விரண்டு முறையும் எக்குவடோர் நாட்டில்தான் கோபா அமெரிக்கா போட்டி நடத்தப்பட்டது.
Remove ads
குறிப்புதவிகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
