எக்லேசியா (பண்டைய கிரேக்கம்)
பண்டைய ஏதென்ஸின் சனநாயகத்தின் முக்கிய அவை From Wikipedia, the free encyclopedia
Remove ads
எக்லேசியா (ecclesia அல்லது ekklesia ( கிரேக்கம்: ἐκκλησία ) என்பது பண்டைய கிரேக்கத்தின் சனநாயக நகர அரசுகளின் குடிமக்கள் அவையாகும்.

ஏதென்சின் எக்லேசியா
பண்டைய ஏதென்சின் எக்லேசியா நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். குடியுரிமைக்கு தகுதி பெற்ற அனைத்து ஆண் குடிமக்களுக்குமான பிரபலமான அவை இது ஆகும். [1] கிமு 594 இல், சோலோன் கொண்டுவந்த அரசியல் சீர்திருத்தத்தின்படி அனைத்து ஏதெனியன் குடிமக்களையும் அவர்களின் வகுப்பைப் பொருட்படுத்தாமல் இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். போரை அறிவித்தல், இராணுவ வியூகம் , அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவை இந்த அவையின் பொறுப்பு. இது ஆர்கோன்களை நியமனம் செய்வதற்கும் தேர்ந்தெடுக்கும் பணியையும் மேற்கொண்டது. இதற்கு முன்பு அரயோப்பாகசின் உறுப்பினர்களே ஆர்கோன்கள மறைமுகமாகத் தேர்ந்தெடுத்து வந்தனர். எக்லேசியா அவையானது ஆர்கோன்கள் பதவியேற்ற பிறகு அவர்களின் செய்ல்பாடுகள் குறித்து கேள்வி கேட்கும் உரிமையையும் கொண்டிருந்தது. இந்த அவையின் ஒரு பொதுவான கூட்டத்தில் மொத்த குடிமக்களான 30,000-60,000 பேர்களில் சுமார் 6000 பேர் கலந்து கொள்பவர்களாக இருக்கலாம். எவ்வாறாயினும், ஏதென்சின் நகர ஆளும்வர்க செல்வந்தர்களாக அல்லாதவர்கள் கி.மு. 390 களுக்கு முன்புவரை இதில் கலந்து கொள்ல வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கும். கூட்டம் முதலில் மாதம் ஒருமுறை கூடியது, ஆனால் பின்னர் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை கூடியது. எக்லேசியாவுக்கான நிகழ்ச்சி நிரல் பிரபல சபையான பூலியால் தரப்பட்டது. கைகளை உயர்த்தி, கற்களை எண்ணி, ஓட்டு சில்லுகளைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு செய்யப்பட்டது.
300 சித்தியன் அடிமைகளைக் கொண்ட ஒரு ஊழியர் படை, ஏதென்சின் அகோராவில் தங்கியிருந்த குடிமக்களை அவைக் கூட்டங்களில் கலந்துகொள்ள தூண்டுவதற்காக செங்காவி நிற கயிறுகளை ஏந்திச் சென்றது. கூட்டத்தில் கலந்துகொள்ளாத சிவப்பு நிற ஆடைகளை அணிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படது. [2] [3]
சில சமயங்களில் முடிவுகளை எடுக்க 6,000 உறுப்பினர்கள் தேவைப்படும் கோரம் வேண்டி இருந்தது. எக்லேசியா பவுலை உண்மையில் சீட்டுக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சோலனின் கீழ் அவர்களின் சில அதிகாரங்களை பெரிக்கிள்ஸ் தனது சீர்திருத்தங்களின் வழியாக அவையிடம் ஒப்படைத்தார்.
Remove ads
எக்லெசியாஸ்டெரியன்
பண்டைய கிரேக்கத்தில், எக்லேசியாஸ்டீரியன் என்பது, எலக்சியாவின் உச்ச கூட்டங்களை நடத்தும் நோக்கத்திற்காக கட்டப்பட்ட ஒரு கட்டடமாகும். மற்ற பல நகரங்களைப் போல ஏதென்சில் எக்லெசியாஸ்டெரியன் இல்லை. அதற்கு பதிலாக, அவையின் வழக்கமான கூட்டங்கள் பின்னிக்சு மலையில் நடத்தப்பட்டன. மற்றும் இரண்டு வருடாந்திர கூட்டங்கள் டயோனிசஸ் அரங்கில் நடந்தன. கிமு 300 இல் எக்லேசியாவின் கூட்டங்கள் அரங்கிற்கு மாற்றப்பட்டன. அவையின் கூட்டங்கள் அதிக பார்வையாளர்களை ஈர்க்கக்கூடும்: கிமு ஐந்தாம் நூற்றாண்டில் ஏதென்சில் 6,000 குடிமக்கள் இக்கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கலாம். [4]
Remove ads
மேலும் பார்க்கவும்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads