எசு. முரளிதர்

இந்திய நீதிபதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

எசு. முரளிதர் (S. Muralidhar) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். தற்போது, ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள இவர் மதராசு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.[1] இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.[2] இவர் மே 2006-ல்[3] குடியரசுத் தலைவரால் தில்லி உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் மார்ச் 2020 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி ஏற்றார்.[4]

விரைவான உண்மைகள் மாண்புமிகு நீதியரசர்எசு. முரளிதர், தலைமை நீதிபதி ஒரிசா உயர் நீதிமன்றம் ...
Remove ads

கல்வி

எசு. முரளிதர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் தனது இளம் அறிவியல் (வேதியியல்) படிப்பை 1981-ல் முடித்து சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் படிப்பில் முதல் தரவரிசையைப் பெற்றார். இலட்சுமிநரசா ரெட்டி, எல் சி மில்லர் பதக்கங்கள் மற்றும் கார்மைக்கேல் மற்றும் இன்னெசு பரிசு, 1984 ஆகியவற்றைப் பெற்றார். சட்ட மாணவராக, இவர் மெட்ராசு சட்டக் கல்லூரியின் இரு உறுப்பினர் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். அகில இந்திய மாதிரி நீதிமன்ற போட்டியில் வென்றார். இதன் காரணமாக 1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாசிங்டன் டி. சி. யில் நடைபெற்ற 25வது பிலிப் சி. செசப் சர்வதேச சட்ட மாதிரி நீதிமன்றப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் முதுநிலை சட்டப்படிப்பினை 1990-ல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டத்தில் நிபுணத்துவத்துடன் முதல் தரவரிசையில் முடித்தார். பிப்ரவரி 2003-ல் "இந்தியாவில் சட்ட உதவி மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு" என்ற தலைப்பில் முனைவர் பட்டஆராய்ச்சினை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்திய நிறுவனச் செயலர்களின் நிறுவனத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.[5]

Remove ads

ஆரம்ப கால பணி

எசு.முரளிதர் 1984 செப்டம்பரில் சென்னையில் சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். இவர் திசம்பர் [5] 1985-ல் நிறுமச் செயலர் தகுதியைப் பெற்றார். சூலை 1987-ல், இவர் தனது தில்லி நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியினைத் தொடர்ந்தார். இங்கு இவர் ஆரம்பத்தில் ஒரு இளைய வழக்கறிஞராக அப்போதைய கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் ஜி. இராமசாமியிடம் பணியாற்றினார். பின்னர் இவர் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞரானார்.[6] முரளிதர் முதன்மையாக இந்திய உச்ச நீதிமன்றத்திலும் தில்லி உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றினார். இவர் 1990-ல் வழக்குரைஞர்-வழக்குரைஞர் தேர்வில் தகுதியில் முதல் இடத்தைப் பெற்றார். முகேசு கோசுவாமி நினைவுப் பரிசு பெற்றார். உச்சநீதிமன்றம் சட்ட சேவைகள் குழுவின் வழக்கறிஞராகவும் செயல்பட்ட இவர் பின்னர் இரண்டு முறை அதன் உறுப்பினராக இருந்தார். போபால் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வழக்குகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படும் நபர்கள் சிறையில் அடைக்கப்பட்ட பரிதாபகரமான சூழ்நிலைகள்[7] மற்றும் நர்மதா அணைகளால் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான வழக்குகள் இவரது சார்பு வேலைகளில் அடங்கும்.[8] பல பொது நல வழக்குகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தால் உதவி வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். முரளிதர், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆலோசகராகவும், திசம்பர் 2002 முதல் மே 2006 வரை சட்ட ஆணையத்தின் [3] பகுதி நேர உறுப்பினராகவும் இருந்தார்.

Remove ads

நீதிபதி பதவி

நீதிபதி முரளிதர் 29 மே 2006 [9] தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக ஏறக்குறைய 14 ஆண்டுகள் பணியாற்றிய போது, பல்வேறு பிரச்சனைகளைக் கையாள்வதில் பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை இவர் வழங்கியுள்ளார்.[6][10][11][12] பின்னர் இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக மாற்றப்பட்டார். இங்கு இவர் மார்ச் 6 2020 அன்று பதவியேற்றார்.[4] ஒரு நீதிபதியாக இவர் "மை லார்ட்" மற்றும் "யுவர் லார்ட்ஷிப்" ஆகிய வார்த்தைப் பிரகடனங்களை நீதிமன்றத்தில் பயன்படுத்துவதை நிராகரித்தார். மேலும் இவரது நீதிமன்றத்தின் தினசரி காரணப்பட்டியலில் ஒரு குறிப்பைச் சேர்க்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.[13]

"பணிமாற்றம்" தொடர்பான சர்ச்சை

12 பிப்ரவரி 2020 அன்று நடைபெற்ற அப்போதைய இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றக் கொலீஜியம், நீதிபதி முனைவர் எசு. முரளிதரை தில்லி உயர் நீதிமன்றத்திலிருந்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரைத்தது.[14] இந்திய உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியத்தின் பரிந்துரையை இந்தியக் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். மேலும் 26 பிப்ரவரி 2020 அன்று இரவு இடமாற்றம் அறிவிக்கப்பட்டது.[15][16][17] நீதிபதி எசு. முரளிதரின் அவசரமான "நள்ளிரவில்" இடமாற்றம் நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களால் பரவலாகப் பேசப்பட்டது. 2020 தில்லி கலவரத்தின் போது காவல்துறையின் செயலற்ற தன்மை குறித்து நீதிபதி முரளிதர் தலைமையிலான தில்லி உயர் நீதிமன்ற இருக்கை தெரிவித்த கருத்துக்களின் விளைவாகக் கருதப்பட்டது.[18][19][20][21][22][23][24] மார்ச் 5, 2020 அன்று தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய முழு நீதிமன்றக் குறிப்பின் போது நீதிபதி முரளிதர், நிகழ்வுகளின் தொடர் நிகழ்வுகள் குறித்த விவரங்களை அளித்து இடமாற்றம் குறித்தும் பேசினார்.[5][25][26]

ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு

15 திசம்பர் 2020 அன்று, இந்தியத் தலைமை நீதிபதி எஸ். ஏ.பாப்டே தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம், நீதிபதி முரளிதரை ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு அளித்துப் பரிந்துரை செய்தது.[27] இவர் 31 திசம்பர் 2020 அன்று ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் மற்றும் 4 சனவரி 2021 அன்று பதவியேற்றார்.

குறிப்பிடத்தக்க வழக்குகள்

நடுவர் மன்றம்
  • இண்டர்டோல் ஐ. சீ. எசு. செகோன்சு ஓ & எம். கோ. பி. லிமிடெட் வி. இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (2013)
  • செல்வி. லான்கோ-ராணி (ஜே.வி) வி. இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (2016)[28]
  • குல்ஷன் காத்ரி வி. கூகிள் நிறுவனம் (2017)[29]
நிர்வாக சட்டம்
  • பிரகாசு அட்லாண்டா ஜே.வி. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (2010)[30]
  • சிசிஐ வி. கிராசிம் தொழிற்சாலை (2019)[31]
அறிவுசார் சொத்துரிமை சட்டம்
  • பனியன் ட்ரீ ஹோல்டிங் (பி) லிமிடெட் v. ஏ. முரளி கிருஷ்ணா ரெட்டி (2009) [32]
  • எஃப். ஹாப்மேன்-எல்ஏ ரோச் லிமிடெட் வி. சிப்லா லிமிடெட் (2009) [33]
  • பேயர் கழகம் வி. இந்திய ஒன்றியம் (2010) [34]
  • நிப்பான் ஸ்டீல் நிறுவனம் வி. இந்திய ஒன்றியம் (2011) [35]
சேவை மற்றும் தொழிலாளர் சட்டம்
  • கட்டுமான பிரிவினர் சங்கம் எதிர். இந்திய ஒன்றியம் (2007) [36]
  • கழிவுநீர் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளுக்கான தேசிய பிரச்சாரம் (2008)[37]
  • தேவ் சர்மா வி. இந்திய ஒன்றியம் (2019) [38]
  • சம்பு சர்மா வி. டெல்லி உயர் நீதிமன்றம் (2019) [39]
வரிவிதிப்பு
  • சிஐடி வி. காபூல் சாவ்லா (2015) [40]
  • கார்ல்ஸ்பெர்க் இந்தியா பிரைவேட். லிமிடெட் வி. இந்திய ஒன்றியம் (2016) [41]
  • சிஐடி வி. ஜனதா கட்சி (2016) [42]
  • சிஐடி வி. இந்திய தேசிய காங்கிரசு (2016) [43]
  • டிஐடி (விலக்குகள்) v. விஸ்வ இந்து பரிஷத் (2017) [44]
  • ஆன் குவெஸ்ட் மெர்ச்சண்டைசிங் இந்தியா பிரைவேட். லிமிடெட் வி. ஜிஎன்சிடிடீ (2017) [45]
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

முரளிதர் சட்ட ஆய்வாளரான உஷா இராமநாதனை மணந்தார். [6]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads