எச்.எம்.எசு சலஞ்சர் (1858)

From Wikipedia, the free encyclopedia

எச்.எம்.எசு சலஞ்சர் (1858)
Remove ads

எச். எம். எசு சலஞ்சர் (1858) (HMS Challenger (1858)) என்னும் நீராவியின் உதவியால் இயங்கிய பிரித்தானியக் கடற்படைக் கப்பல் ஐந்தாவது எச்.எம்.எசு சலஞ்சர் ஆகும். வேராகுரூசு (Veracruz) துறைமுக நகர ஆக்கிரமிப்பையும் உள்ளடக்கி 1862 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மெக்சிக்கோவுக்கு எதிரான தாக்குதலில் இக் கப்பல் பங்கெடுத்தது. கிறித்தவ மதகுரு ஒருவரையும் அவருடன் இருந்த சிலரையும் கொலை செய்ததற்குப் பழிவாங்கும் முகமாக 1866 இல் இடம்பெற்ற, சில பிஜி நாட்டவர் மீதான நடவடிக்கையிலும் இக் கப்பல் பங்கெடுத்துக்கொண்டது. சலஞ்சர் ஆய்வுப்பயணம் எனப்படும் உலகின் முதலாவது கடல்சார் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டதன் மூலம் இக் கப்பல் புகழ் பெற்றது.[1][2][3]

விரைவான உண்மைகள் கப்பல், பொது இயல்புகள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads