எச்.ஏ.எல். துருவ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எச்ஏஎல் துருவ் (HAL Dhruv) என்பது ஒரு பயன்பாடு உலங்கு வானூர்தி ஆகும். இது இந்தியாவின் இந்துசுதான் வானறிவியல் நிறுவனத்தால் செருமனியின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.
இதன் முதல் பரிசோதனை வான் பயணம் 1992 இல் நடந்தது, ஆயினும் ராணுவத்தின் தேவைகள் மாறுபட்டதாலும் நிதிப் பற்றாக்குறையினாலும் இத்திட்டம் தாமதமடைந்தது.[2] அதன் பின்னர் இந்தியா நடத்திய அணு ஆயுத பரிசோதனையினால் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ தடைகளினால் இந்த திட்டம் மேலும் தாமதமடைந்தது. இறுதியில், இது 2002 ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புப் படைகளின் உபயோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.[2]
இது மேல் பகுதியில் நான்கு பட்டைகள் கொண்ட ஒரு பெரிய சுழழியையும், வால் பகுதியில் ஒரு சிறிய சுழழியையும் கொண்டுள்ளது.[5] இந்த உலங்கூர்தி இராணுவம் மற்றும் பொது உபயோகம் இரண்டையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இது நேப்பாளம், இசுரேல், மாலத்தீவு மற்றும் மொரிசியசு ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.[6][7][8][9]
Remove ads
விவரக்குறிப்புகள்
பொது இயல்புகள்
- குழு: 2
- கொள்திறன்: 12
- நீளம்: 15.87 m (52 அடி 1 அங்)
- அகலம்: 3.15 m (10 அடி 4 அங்)
- உயரம்: 4.98 m (16 அடி 4 அங்)
- மொத்தப் பாரம்: 4,445 kg (9,800 lb)
- தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 5,800 kg (12,787 lb)
- எரிபொருள் கொள்ளவு: 1,055 kg (2,326 lb)
- சக்தித்தொகுதி: 2 × தர்போமேக்கா டிஎம் 333 , 807 kW (1,082 shp) each
- சக்தித்தொகுதி: 2 × எச்ஏஎல்/தர்போமேக்கா சக்தி 1-எச் , 1,068 kW (1,432 shp) each
- முக்கிய சுழலி விட்டம்: 13.2 m (43 அடி 4 அங்)
- முக்கிய சுழலி பரப்பளவு: 136.85 m2 (1,473.0 sq ft)
செயற்பாடுகள்
- செல்லும் வேகம்: 250 km/h (155 mph; 135 kn)
- வரம்பு: 630 km (391 mi; 340 nmi)
- சகிப்புத்தன்மை: 3 மணி 42 நிமிடங்கள்
- உச்சவரம்பு: 6,096 m (20,000 அடி) [12]
- ஈர்ப்பு விசை வரம்பு: 3.5
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads