எச்1.என்1 சளிக்காய்ச்சல்

From Wikipedia, the free encyclopedia

எச்1.என்1 சளிக்காய்ச்சல்
Remove ads

எச்1.என்1 சளிக்காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae)[2] குடும்பத்தைச் சேர்ந்த தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும். இந்நோய் இன்புலியன்சா A, இன்புலியன்சா B, மற்றும் இன்புலியன்சா C என்னும் மூன்று வகையான தீநுண்மத்தினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A வினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது[3]. இந்நோயை பரப்பும் தீ நுண்மம் மிகவும் அரிதான மரபு அணு தொகுதியை பெற்று இருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளார்கள்[4]

Thumb
பன்றிக் காய்ச்சல் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு ஆர்த்தோமிக்சோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த தீநுண்மத்தினால் பரவுகிறது
Thumb
Electron microscope image of the reassorted H1N1 influenza virus photographed at the CDC Influenza Laboratory. The viruses are 80–120 nanometres in diameter.[1]

இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்நோய் பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. ஒரு மனிதரை தாக்கியபின், மனிதரின் உடலுக்குள் இத்தீநுண்மம் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது[5].மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அமெரிக்காவில் இருந்து இந்த நோய் ஐரோப்பாவிற்கும் பரவியுள்ளது[6]. வட அமெரிக்கா முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு மெக்சிகோ நாட்டில் முதலில் பன்றி காய்ச்சல் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் 1,614 பேர் அவதிப்பட்டு வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலுக்கு மெக்சிகோவில் இதுவரை இந்த காய்ச்சலுக்கு சுமார் 149 பேர் பலியாகி இருக்கின்றனர். அமெரிக்காவில் 20 பேரும், கனடாவில் 6 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கு உரிய நோய் பரவல் பிரேசில், இசுரேல், ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருப்பதாக கருதப்படுகிறது[6]. 74 நாடுகளில் இந்நோயினால் 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவிலும் இந்நோய் பரவி வருகிறது. இதுவரை (11 ஆகஸ்ட்,2009) நாடு முழுவதும் 959 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.[7]

மகாராட்டிர மாநிலம், புனே நகரம் பன்றிக் காய்ச்சலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிரத்தில் தாணே மாவட்டம், தமிழ்நாடு, தில்லி, கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகியவற்றிலும் பன்றிக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Remove ads

காய்ச்சலின் அறிகுறிகள்

Thumb
பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள்[8]

அறிகுறிகள் வழமையான பருவகால சளிக்காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றவை. அவற்றுள் பின்வருவன அடங்கும்: காய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி, களைப்பு, பலவீனம். குறிப்பாக உடல் சூடாதல் - சுரம் (100.o F க்கு மேல்), தலைவலி, தசைவலி [9], உடல் பலவீனம், தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்[10]. அவற்றுடன் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு என்பன சேரக்கூடும்.

Remove ads

எந்தத் தருணத்தில் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்?

பின்வரும் சிக்கல்கள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்: சிறுவர்/குழந்தைகளுக்கு:

  • வேகமான மூச்சு விடுதல், மூச்சு விடுதலில் சிரமம்
  • நீலம் அல்லது பழுப்பு நிறத்தோல்
  • தேவையான அளவு நீர் உட்கொள்ளாமை
  • நிற்காத, கடும் வாந்தி
  • தூங்கிக்கொண்டே இருத்தல், கலந்துரையாட விருப்பமின்மை

[9]

பன்றிக் காய்ச்சலைக் கண்டறிய உதவும் ஆய்வுகள்

மருந்து

பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்களுக்கு டமி ·ப்ளூ மற்றும் ரிலின்ஸா என்ற மருந்துகள் அளிக்கப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் தாக்கி 48 மணி நேரத்திற்குள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.

பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் ஒன்று அல்லது இரண்டு நாட்களல் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த மருந்து ஒருவருக்கு 5 முதல் 7 நாட்கள் வரை கொடுக்கலாம்.

டமி ஃப்ளு மாத்திரைகள் ஒரு வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கலாம்.

ரிலின்ஸா என்ற மாத்திரையை 7 வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம். இதனை தடுப்பு மருந்தாக 5 வயது ஆனவர்கள் மற்றும் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம்.

இந்த மருந்துகள் அனைத்தும் மருத்துவர்களால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும். இந்த காய்ச்சலிருந்து மக்களை காப்பதற்கான தடுப்பு ஊசி இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் பல நாட்டு மருந்து நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இதற்காக அவை பாதிக்கப்பட்டவர்களின் இரத்தங்களை கேட்டுள்ளனர். அதிலிருக்கும் தீ நுண்மத்தை ஆராய்ந்து விரைவில் மருந்து தயாரிக்க முடியும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.[11]

Remove ads

பன்றிக் காய்ச்சல் தொற்றுபரவுதல்

Thumb
  உறுதி செய்யப்பட்ட தொற்று பரவல் - உயிரிழப்பும் உண்டு
  உறுதி செய்யப்பட்ட தொற்று பரவல்
  உறுதி செய்யப்படா சந்தேகத்திர்குரிய தொற்று பரவல்
இதையும் பார்க்கவும்: பன்றி காய்ச்சல் பரவல் கூகுள் வரைபடத்தில், H1N1 நேரடி பன்றி காய்ச்சல் பரவல்
  • 2007 பிலிப்பைன்சில் தொற்றுபரவுதல்
  • 1976 அமெரிக்காவில் தொற்றுபரவுதல்
  • 2009 பன்றிக் காய்ச்சல் தொற்றுபரவுதல்

நோய் தடுப்பு முறை

நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது நுகர்மூடி அணிந்துகொள்வது மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்ளது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது[6].[12]

சளிக்காய்ச்சல் பரவாது தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?

பின்வருவன கனடா நலத்துறை விபர மடலில் கூறப்பட்டுள்ளன.[13] சளிக்காய்ச்சல் பரவாது தடுப்பதற்கு உங்கள் கைகளைக் கழுவுவதே ஒரேயொரு சிறந்த வழி.

நோய் பரவாது தடுப்பதற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்;:

  • உங்கள் கைகளை அடிக்கடி சவர்க்காரம், இளஞ்சுடுநீர் கொண்டு 15 முதல் 20 நொடிகள் வரை கழுவவும் அல்லது மதுசாரம் மிகுந்த கை-பூசி கொண்டு சுத்தப்படுத்தவும்.
  • உங்கள் கண், மூக்கு, வாய் என்பவற்றைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
  • மென்தாள் கொண்டு இருமவும் அல்லது தும்மவும். அதன் பின்னர் உங்கள் கைகளைக் கழுவவும் அல்லது கிருமிபோக்கி கொண்டு சுத்தப்படுத்தவும்.
  • உங்களிடம் மென்தாள் இல்லாவிட்டால், உங்கள் சட்டைக் கை அல்லது புயம் கொண்டு இருமவும் அல்லது தும்மவும் - கை கொண்டு இருமவோ, தும்மவோ கூடாது.
  • சளிக்காய்ச்சல் நுணங்கி தொற்றக்கூடிய பாத்திரங்கள், குவளைகள், இசைக்கருவிகளின் வாய்முனைகள், தண்ணீர்ப் புட்டிகள் முதலிய பொருட்களைப் பகிரக் கூடாது.
  • காய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி போன்ற சளிக்காய்சலுக்குரிய அறிகுறிகள் போன்றவை, மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடிய அறிகுறிகள் போன்றவை தென்படுகின்றனவா என்று உற்றுநோக்கவும். தென்பட்டால், வீட்டிலேயே தங்கியிருக்கவும்.
  • நோய்வாய்ப்பட்டால், வீட்டிலேயே தங்கியிருக்கவும்.
  • நன்கு ஆறித்தேறவும், உடற்செயல் புரியவும், பானங்கள் நிறையப் பருகவும், சத்துணவு உண்ணவும்.
Remove ads

கொள்ளை நோய்

ஜூன் 11 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது.[14]

சித்த மருத்துவம்

பன்றிக் காய்ச்சல் வருமுன் தடுக்கவும், வந்தபின் நீக்கவும் நிலவேம்பு, கண்டுபாரங்கி என்று அழைக்கப்படும் சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவள்ளி, சீந்தில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், அக்ரஹாரம் ஆகிய மூலிகைகளை சம அளவில் எடுத்து கபசுரக் குடிநீரை கஷாயமாக காய்ச்சிக் குடித்தால் நோய் நீங்கும். நான்கு தேக்கரண்டி தூளை, 200 மில்லி லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டுவதன் மூலம் கிடைக்கும் 60 மில்லி லிட்டர் கஷாயத்தை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாள்கள் குடித்தால் பன்றிக் காய்ச்சல் நோய் நீங்கும்.[15]

வரலாறு

பன்றிக்காய்ச்சலை உருவாக்கும் எச்1என்1 வகைத் தீநுண்மம், 1918இல் பரவிய, ஏறக்குறைய 50 லட்சம் மனித உயிர்கள் இறப்பதற்குக் காரணமாயிருந்த,[16] எசுப்பானிய ஃப்ளூ என்றழைக்கப்படும் உலகம்-தொற்றிய 1918 ஃப்ளூ கொள்ளை நோயின் பரம்பரையில் வரும் ஒரு வகைத் தீநுண்மமே ஆகும் [17] ஆனால் தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு புதிய எச்1என்1 தீநுண்மம் ஆகும். இது இன்ஃப்ளுயென்சா ஏ வகைத் தீநுண்மத்தின் துணைப்பிரிவான எச்1என்1 வகையிலுள்ள நான்கு திரிபுறுக்களில் ஏற்பட்ட சடுதி மாற்றங்களால் தோன்றியது எனக் கருதப்படுகிறது.[18]

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads