எடி இலமார்

அமெரிக்கத் திரைப்பட நடிகைகள் From Wikipedia, the free encyclopedia

எடி இலமார்
Remove ads

எடி இலமார் (Hedy Lamarr) (/ˈhɛdi/; born Hedwig Eva Maria Kiesler, 9 November 1914 – 19 January 2000)[a] ஓர் ஆஸ்திரிய அமெரிக்க திரைப்பட நடிகையும் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.[1] ஜெருமனியில் திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கிய போது 1933 இல் எக்ஸ்டசி என்ற படத்தில் காதல் காட்சிகளில் நடித்ததற்காக சர்ச்சைக்குள்ளானார். எனவே இரகசியமாக பாரீசுக்குச் சென்றார். அங்கு எம்.ஜி.எம் திரைப்பட நிறுவத்தின் தலைவர் லூயிஸ் பி. மேயர் என்பவரைச் சந்தித்தார். ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கு மேயருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். 1930 களிலிருந்து 1950 வரை அங்கு நடிகையாகக் கோலொச்சினார்.[2] பல்வேறு புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்தார். 1938 இல் சார்லஸ் போயருடன் நடித்து வெளிவந்த அல்கியர்ஸ் 1940 இல் ஸ்பென்சர் டிரேசியுடன் நடித்த ஐ டேக் திஸ் வுமன் , 1940 இல் கிளார்க் கேபிள் என்பவருடன் நடித்த கொமரேட் X 1941 ஜேம்ஸ் ஸ்டீவர்ட் என்பவருடன் நடித்த கம் லிவ் வித் மி போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும்.[3] இயக்குநர் மேக்ஸ் ரீன்ஹார்டு இவரை ஐரோப்பாவின் அழகிய மங்கை என அழைத்தார்.[4][5][6]

விரைவான உண்மைகள் எடி இலமார், பிறப்பு ...

இவரது முதல் திருமணம் நடந்த வேளையில் திரைப்படத்துறையிலிருந்து இலமார் பயன்பாட்டு அறிவியல் மீதான தனது ஆர்வத்தினை வளர்த்துக்கொண்டார். இதனால் ஒரு கண்டுபிப்பாளராக உருவனார். இரண்டாம் உலகப்போரின் போது ஜியார்ஜ் ஆந்தீல் என்பவருடன் இணைந்து ரேடியோ அலை நெருக்குதல் குறித்து ஆய்வு செய்தார். ஆயினும் இவ்வாய்வில் ஏற்பட்ட வளர்ச்சிகள் இவரது கண்டுபிடிப்பைப் பின்னுக்குத் தள்ளின.[7] 1960 வரை அமெரிக்கக் கடற்படை இவரது ஆய்வை அங்கீகரிக்கவில்லை. இவரது ஆய்வுக்கோட்பாடுகளே தற்போது கம்பியில்லா இணைய இணைப்பு, புளூடூத் ஆகிய தொழில் நுட்பத்தில் ஒருங்கிணைக்ப்பட்டுள்ளன.[8][9][10] இந்த ஆய்வு 2014 இல் தேசிய கண்டுபிடிப்பாளர் அரங்கத்தில் இணைய இவருக்கு உறுதுணையாக இருந்துதது.[7][11]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads