எட்நீர் மடம்
கேரளத்தின் காசர்கோடு மாவட்டதில் உள்ள மடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எட்நீர் மடம் (Edneer Mutt) என்பது கேரளத்தின், காசர்கோடு மாவட்டதில் எட்நீரில் அமைந்துள்ள இந்து சமய துறவிகளுக்கான கல்வி நிறுவனம் ஆகும். இது ஆதிசங்கரரின் முதல் நான்கு சீடர்களில் ஒருவரான தொட்டகாச்சார்யாவின் மரபைச் சேர்ந்தது. இது சமயம், கலாச்சாரம், கலை, இசை, சமூக சேவை ஆகியவற்றில் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டதும், 1200 ஆண்டுகளுக்கும் மேலான அத்வைத பாரம்பரியத்தின் தனித்துவமான ஸ்மார்த்த பகவத பாரம்பரியத்தைப் பின்பற்றும் நிறுவனமும் ஆகும்.
ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சங்கராச்சாரியார் தொட்டகாச்சார்யா ஸ்ரீ கேசவானந்த பாரதி ஸ்ரீபடங்கலவரூ (எடநீர் சுவாமிஜி எடநீர் சுவாமிகள் / கேரள சங்கிராச்சாரியார் என்றும் அழைக்கப்படுபவர்) என்பவர் எட்நீர் மடத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். இந்த மடத்தின் தலைவரான கேசவானந்த பாரதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகம் குறிப்பிடப்பட்ட பெயர் ஆகும். [1] [2] [3] [4] [5] [6] முழு கேரள மாநிலத்திற்கும் உள்ள ஒரே சங்கராச்சாரியார் இவர்தான். இவர் முறையாக "ஸ்ரீ சங்கராச்சாரியார் தொட்டகாச்சார்யா மகாசம்ஸ்தனம்" என்று அழைக்கப்படுகிறார்.
எட்நீர் மடமானது கேரள மாநிலத்தின் காசராகோடு மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24]
Remove ads
படக்காட்சியகம்
- நேபாளத்தின் பசுபதிநாத் கோயிலில் சங்கராச்சாரியார் கேசவநந்த பாரதி (வலதுபுறம்) 2009 அக்டோபர் மாதத்தில் இந்திய ஆர்வலர் டாக்டர் ஹரிகுமார் பல்லதட்காவுடன் (இடதுபுறம்).
- தன் சீடர்களுடன் சுவாமிகள் ஊர்வலம், 2012.
- கேசவானந்த பாரதி மற்ற சங்கராச்சாரியர்களுடன் 'பிராந்திய சங்கராச்சாரியர்களுடனான சந்திப்பில். (வலது).
- பிப்ரவரி 2013 இல் அலகாபாத்தில் நடைபெற்ற மகா கும்ப மேளாவில் பக்தர்களுடன் கேசவானந்த பாரதி சுவாமிகள்.
- பிப்ரவரி 2013 இல் அலகாபாத்தில் நடைபெற்ற மகா கும்ப மேளாவில் பக்தர்களுடன் கேசவானந்த பாரதி சுவாமிகள்.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads