எட்மண்டு ஏலி

From Wikipedia, the free encyclopedia

எட்மண்டு ஏலி
Remove ads

எட்மண்டு ஏலி (Edmond Haley[1] அல்லது Edmund Halley[2][3] 8 நவம்பர் 1656 – 14 சனவரி 1742) என்பவர் ஆங்கிலேய வானியலாளரும், புவியியற்பியலாளரும், கணிதவியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் ஏலியின் வால்வெள்ளியின் சுற்றுப்பாதையை முதன் முதலில் கணித்தவர் இவரே.

விரைவான உண்மைகள் எட்மண்ட் ஏலிEdmond Halley, பிறப்பு ...
Remove ads

இளமைப் பருவம்

ஏலி கிழக்கு இலண்டனில் ஏகர்சுடனில் பிறந்தார். அவரது தந்தை முதுவல் எட்மண்டு ஏலி டெர்பிசயர் குடும்ப வழித்தோன்றல். அவர் இலண்டனில் சவுக்காரஞ் செய்யும் குழுமம் வைத்திருந்த பெரிய செல்வந்தர். சிறுவனாக இருந்தபோதே ஏலி கணிதத்தில் ஆர்வமுடன் இருந்துள்ளார். இவர் இலண்டன் புனித பால் பள்ளியிலும் 1673 முதல் ஆக்சுபோர்டு அரசிக் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். பட்டப் படிப்பின்போதே சூரியக் குடும்பத்தைப் பற்றியும் சூரியக் கரும்புள்ளிகள் குறித்தும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.

Remove ads

சொந்த வாழ்க்கை

ஏலி மேரி டூக்கை 1682இல் திருமணம் செய்து கொண்டு சுலிங்டனில் வாழ்ந்தார். இவ்விணையருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads