எட் மிலிபாண்ட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எட்வர்ட் சாமுவேல் "எட்" மிலிபாண்ட் (Edward Samuel "Ed" Miliband, பிறப்பு: டிசம்பர் 24, 1969) ஐக்கிய இராச்சியத்தின் தொழிற் கட்சியின் 20வது தலைவரும், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார். இவர் டொன்காஸ்டர் வடக்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2005 ஆம் ஆண்டில் இருந்து வருகிறார். 2007 முதல் 2010 வரை கோர்டன் பிரவுனின் ஆட்சியின் கீழ் அமைச்சராகவும் இருந்தவர்.
லண்டனில் பிறந்த மிலிபாண்ட் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், மற்றும் பொருளியலுக்கான லண்டன் பள்ளி ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். 2010 செப்டம்பர் 25 இல் நடைபெற்ற தொழிற் கட்சிக்கான தலைவர் தேர்தலில் இவர் தனது மூத்த சகோதரரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான டேவிட் மிலிபாண்டை எதிர்த்துப் போட்டியிட்டு மிகக்குறைந்த பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்.
Remove ads
வெளி இணைப்புகள்
- Ed Miliband, MP for Doncaster North பரணிடப்பட்டது 2012-10-14 at the வந்தவழி இயந்திரம் official site
- Ed Miliband for Labour Leader பரணிடப்பட்டது 2012-10-14 at the வந்தவழி இயந்திரம் official campaign website
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads