எண்ணிம ஆவணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எண்ணிம ஆவணம் அல்லது மின்னியல் ஆவணம் என்பன கணினிகளில் நிரல்மொழிகள் மற்றும் கணினி கோப்புக்களைத் தவிர்த்த பிற கணிப்பொறி பயன்பாடுகளால் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் படிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் சேமிக்கப்படுகின்ற ஆவணங்களாகும்; இவை நேரடியாக கணினி அல்லது கைபேசி போன்ற மின்கருவிகளில் காணக்கூடியனவாகவோ தாள்களில் அச்சிடக் கூடியனவாகவோ இருக்கலாம்.
துவக்கத்தில், கணினித் தரவுகள் அதன் உள் பயன்பாட்டிற்கு மட்டுமேயாகவும் அதன் இறுதி வெளிப்பாடு எப்போதுமே தாளிலுமே இருந்து வந்தது. நாளடைவில் கணினி பிணையங்கள் பெருகப் பெருக தாள் வடிவில் பகிர்வதைவிட எண்ணிம முறையில் பகிர்ந்துகொள்வது கூடுதல் எளிமையாகவும் சிக்கனமாகவும் அமைந்தது. கணித்திரைத் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட மேம்பாடுகள் இவற்றை படிக்கவும் எளிதாக்கின. இதனால் காகிதத் தேவை குறைவதுடன் சேகரிப்பு இடமும் தவிர்க்கப்படுகிறது. கட்டைவிரல் நினைவகங்களும் நினைவட்டைகளும் இவ்வகை ஆவணங்களை சேகரிப்பதையும் கொண்டுசெல்வதையும் எளிதாக்கின.
இருப்பினும், காகிதத்தாள்களில்லாது பிற வடிவங்களில் காட்சிப்படுத்துவது பல ஒன்றுக்கொன்று ஒவ்வாத கோப்பு வடிவமைப்புகளால் சிக்கல்களை உருவாக்கின. இயக்குதள வேறுபாடுகள, பயன்பாட்டுச் செயலிகளின் வேறுபாடுகளால் ஓர் சீர்தரமான வெளிப்பாடு இல்லாதிருந்தது. மேலும் ஆங்கிலம் அல்லாத ஆவணங்களுக்கு எழுத்துரு காட்சிப்படுத்துதலும் சிக்கலாக இருந்தது. இவற்றைத் தவிர்க்க பல மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் காப்புரிமைக்குட்பட்ட கோப்பு படிப்பான்களை வெளியிடத்தொடங்கினர். (அடோப் நிறுவனத்தின் அக்ரோபேட் படிப்பான் இத்தகைய ஒன்றே). இதற்கு மாற்றாக சீர்தரப்பட்ட காப்புரிமையற்ற கோப்பு வடிவமைப்புகள், (மீப்பாடக் குறிமொழி மற்றும் திறந்த ஆவண வடிவம் போன்றவை) உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. அறிவியல் போன்ற சிறப்புப் பயன்பாடுகளுக்கு TeX அல்லது போஸ்ட்ஸ்கிர்ப்ட் பயன்படுத்தப்படுகிறது.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads