டாஸ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

டாஸ் அல்லது இலங்கை வழக்கின் படி டொஸ் என்றறியப்படும் வட்டு இயக்கு தளம் எனப்பொருள்படும் டிஸ்க் ஆப்பரேட்ங் சிஸ்டம் என்பதன் சுருக்கம் ஆகும். டாஸ் இயங்குதளங்கள் நாவல் டாஸ், டாக்டர் டாஸ், பிறீ டாஸ், மைக்ரோசாப்ட் டாஸ் போன்ற பலரும் சந்தைப்படுத்தியிருந்தாலும் இவற்றுள் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளமே பிரபலமானது ஆகும். இவை விண்டோஸ் 95/98 உடன் உள்ளிணைக்கப்பட்டவை ஆகும். விண்டோஸ் 2000/எக்ஸ்பி போன்றவற்றில் டாஸ் இயங்குதளம் மெய்நிகர் நினைவகத்திலேயே இயங்கும்.

டாஸ் வரைகலைக் சூழல் அற்ற கட்டளைகளால் இயக்கப்படும் தனிப்பயனர்களுக்கான ஒரு நேரத்தில் ஒரு பணியை மாத்திரமே செய்யும் ஓர் இயங்குதளம் ஆகும். டாஸ் இயங்குதளம் பல்வேறு பங்சனூடாக விசைப்பலகையின் உள்ளீடுகளை வாசிக்கவும், தட்டுக்களில் எழுதுவதற்கும் துணையாக பங்சன்களைக் கொண்டுள்ளது.

டாஸ் இயங்குதளத்தில் நெகிழ்வட்டு (பிளாப்பி டிஸ்க்) A: மற்றும் B: என்றவாறு பெயரிடப்படும் வன்வட்டு C: இல் ஆரம்பிக்கும். ஆங்கில அகர எழுத்துக்கள் 26 இதில் இரண்டு எழுத்துக்கள் நெகிழ்வட்டிற்குப் போவதால் டாஸ் இயங்குதளம் ஆகக்கூடுதலாக 24 பாட்டிசன்களை மாத்திரமே ஆதரிக்கும். விண்டோஸ் 2000/எக்ஸ்பி/விஸ்டா போன்று எழுத்துக்கள் அல்லாத பாட்டிசன்களை டாஸ் ஆதரிக்காது. நெகிழ்வட்டிற்கு பாட் 12 என்கின்றன 12பிட் முறையிலான கோப்புமுறையிலும் வன்வட்டிற்கு பாட் 16பிட்/32பிட் போன்ற முறையில் வன்வட்டினைக் கையாளலாம்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads