எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்

2015 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் (MGR Sivaji Rajini Kamal) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்கிய ராபர்ட் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அதன் தயாரிப்பாளரும் உரையாடல் எழுத்தாளருமான வனிதா விஜயகுமார், நிரோஷா, ஐஸ்வர்யா, ராம்ஜி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். படமானது 2015 மே 8 அன்று வெளியானது.[1]

விரைவான உண்மைகள் எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

இந்த படம் நடன இயக்குநர் ராபர்ட் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோரின் சிந்தனையால் உருவானது. அவர்கள் ஒன்றாக இணைந்து நகைச்சுவை படம் தயாரிக்க ஆர்வமாக இருந்தனர். ராபர்ட் இயக்குநராக அறிமுகமானார். மேலும் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். 1980 களில் வனிதாவின் பெற்றோர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரால் தொடங்கப்பட்ட வனிதா பிலிம் புரொடக்சன் என்ற பழைய தயாரிப்பு நிறுவனத்தை வனிதா இந்த படத்தை தயாரிக்க தேர்வு செய்தார். இதன் முந்தைய படங்களான நெஞ்சங்கள் (1982) மற்றும் கை கொடுக்கும் கை (1984) ஆகியவற்றைத் தொடர்ந்து பட நிறுவனத்தின் மூன்றாவது படமாக இது ஆனது. படத்திற்கு பிரபலமான தமிழ் நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் பெயர்களைக் கொண்டு எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற பெயர் இடப்பட்டது.[2] இப்படத்தின் படத்தொகுப்பை ஆர். ஜே. ஆனந்த் செய்ய, அதே நேரத்தில் வனிதா படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களையும் எழுதினார்.[3]

நடிகைகள் நிரோஷா மற்றும் ஐஸ்வர்யாவும் படத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். நகைச்சுவை நடிகர்களான பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் விருந்தினர் வேடங்களில் தோன்றினர்.

Remove ads

இசை

இப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆவார்.

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...

வெளியீடு

விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களுடன் இந்த படம் 2015 மே மாதத்தில் வெளியானது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads