எயினந்தையார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகன் பெயர் எயினன். எயினனின் தந்தையார் எயினந்தையார். இந்தச் சங்ககாலப் புலவரின் பாடலாக ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது நற்றிணை பாடல் எண் 43

பாடல்

"துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்
ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய் மலி உவகை ஆகின்று இவட்கே
அஞ்சல் என்ற இறை கைவிட்டென
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில்
ஓர் எயில் மன்னன் போல
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே."
Remove ads

பாடல் தரும் செய்தி

தலைவன் பொருள் தேடச் செல்லப்போவதாகக் கூறுகிறான். தோழி பக்குவமாகக் கூறித் தடுத்து நிறுத்தும் பாடல் இது.

பொருள் தேடச் செல்லும் வழியில் நல்ல உணவு கிடைக்காதாம். செந்நாய், மானைப் பிடித்துத் தின்றுவிட்டு விட்டுப்போன இறைச்சியைத் தின்றுவிட்டுச் செல்வார்களாம். இப்படிப்பட்ட வழியில் நீ செல்வதை நினைக்கும்போது இவளுக்குச் சிரிப்பு வருகிறது.

'அஞ்சல் என்ற இறை கைவிட்டு என' (பயப்படாதே என்று சொன்ன தெய்வம் கை விட்டுவிட்டது போல) இவன் நெஞ்சழிகிறாள்.

ஒரே ஒரு மதில் சுவரைக் கொண்ட தலைநகரை உடைய மன்னன் அந்த மதிலும் அழியும்போது மனம் நோவது போல இவள் நெஞ்சழிகிறாள்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads