எய்சேபியோ

போர்த்துக்கீசிய கால்பந்து வீரர் From Wikipedia, the free encyclopedia

எய்சேபியோ
Remove ads

எய்சேபியோ , (Eusébio da Silva Ferreira; 25 சனவரி 1942 – 5 சனவரி 2014) , மொசாம்பிக்கில் பிறந்த போர்த்துகீசிய கால்பந்து வீரர். கால்பந்து வரலாற்றில் ஒரு சகாப்தம் என்று அறியப்பட்டார் .[2][3]

விரைவான உண்மைகள் சுய தகவல்கள், முழுப் பெயர் ...
Remove ads

தொழில்முறை போட்டிகள்

ஆப்ரிக்க நாடான மொசாம்பிக், போர்ச்சுகலின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலப்பகுதியில், அவர் போர்த்துகல் அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார்.சுமார் பத்தாயிரம் டாலர்கள் அளவுக்கு பணம் கொடுத்து தமது அணிக்காக விளையாட ஃபென்ஃபிகா அணி அவரை ஒப்பந்தம் செய்தது.[4] போர்ச்சுகல் அணிக்காக 64 போட்டிகளில் விளையாடிய அவர் அந்நாட்டுக்காக 41 கோல்களை அடித்துள்ளார். [5]

Thumb
போர்ச்சுகலில் உள்ள பென்பிகா விளையாட்டரங்கத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள எய்சேபியோவின் சிலை
மேலதிகத் தகவல்கள் போர்த்துகல் அணிக்காக, வருடம் ...
Remove ads

சிறப்புகள்

1962 ஆம் ஆண்டு ஃபென்ஃபிகா அணி ஐரோப்பிய கால்பந்து கோப்பையை வென்றதில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது.[6] இவர் 1966 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் மிக அதிக அளவில் கோல்களை அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றவர் .தனது கால்பந்து வாழ்க்கையில் தொழில்முறை ரீதியில் அவர் விளையாடிய 745 போட்டிகளில் அவர் 733 கோல்களை அடித்துள்ளார். காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுபவர், கறுஞ்சிறுத்தை என்று அவர் வெகுவாகப் புகழப்பட்டார் .[4]

Remove ads

இறப்பு

இதயம் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் , தனது 71 ஆவது வயதில் சனவரி 5 , 2014இல் காலமானார். அவரது மரணத்தை முன்னிட்டு போர்த்துகல் நாட்டு அரசு மூன்று நாள் அரசுமுறை துக்கம் அறிவித்தது.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads