எரித மின்னஞ்சல் தடுக்கும் முறை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எரித மின்னஞ்சல் தடுக்கும் முறை (Anti-Spam Techniques) என்பது தேவையற்ற மின்னஞ்சல்கள் அல்லது தேவையற்ற செய்திகளை (Spam) தடுக்கும் முறையாகும். இந்த முறைகள் மின்னஞ்சல் பயனர்கள், நிறுவனங்கள் மற்றும் இணைய சேவைகளை தேவையற்ற அல்லது தீங்கு விளைவிக்கக் கூடிய மின்னஞ்சல்களில் இருந்து பாதுகாக்கின்றன[1].

தேவையற்ற மின்னஞ்சல்கள் (Email Spam) என்றால் அனுமதியின்றி அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், பெரும்பாலும் விளம்பரங்கள், மோசடி முயற்சிகள் அல்லது கணினி நச்சுநிரல்(Virus), மீன்பிடி முயற்சிகள் (தரவுகளைத் திருடும் நோக்கம் கொண்டவை) அல்லது தீங்கிழைக்கும் குறியீடுகளைப் பரப்புவதற்காக அனுப்பப்படுகின்றன.

Remove ads

தடுக்கும் முறைகள்

அனுப்புநர் சரிபார்ப்பு

இந்த அணுகுமுறை, செய்தியை அனுப்பியவரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. இதில், அனுப்புநரின் மின்அஞ்சல் முகவரி அல்லது அவர் அனுப்பியவரின் முகவரியானது, அங்கீகரிக்கப்பட்ட அனுப்புநர்களின் பட்டியலில் உள்ளதா அல்லது தடை செய்யப்பட்ட அனுப்புநர்களின் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது. மேலும், அனுப்புநரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் எஸ்.பி.எஃப் (Sender Policy Framework - அனுப்புநர் கொள்கை கட்டமைப்பு) அல்லது டி.கே.ஐ.எம் (DomainKeys Identified Mail - DKIM - கள அடையாள அஞ்சல் விசைகள்) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும். இந்த வழிமுறைகள், செய்திகள் உண்மையான மூலத்திலிருந்து வந்தவைதானா என்பதை உறுதிப்படுத்துகின்றன.

  • வடிகட்டுதல்: மின்னஞ்சலில் உள்ள சொற்கள் மற்றும் இணைப்புகளை ஆராய்ந்து தேவையற்றதா என்று பார்க்கிறது.
  • அனுப்புநரின் மின்னஞ்சல் முகவரியைச் சோதிக்கும் (Header-based filtering)
  • மின்னஞ்சலில் வரும் சொற்கள் (இலவசம், சலுகை) அடிப்படையில் கண்டறியும் (Content-based filtering)
  • அளவு கட்டுப்பாடு: ஒரே நேரத்தில் ஒரு இணைய முகவரி அல்லது பயனர் அனுப்பும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்
  • மின்னஞ்சலின் உள்ளடக்கம், சொற்கள், வடிவம் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து எரித/தேவையற்ற மின்னஞ்சல்கள் என்பதை தீர்மானிக்கிறது
  • உலகளாவிய அளவில் எரித மின்னஞ்சல் அனுப்பும் முகவரிகளை பட்டியலிடும் சேவை (Real-time Blackhole List)
  • புதிய அனுப்புநர்களின் மின்னஞ்சலை தற்காலிகமாக நிராகரித்து, உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்தும் (Greylisting).
  • செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி, எரித மின்னஞ்சல்-ஐ புரிந்து கொண்டு தடுக்கும் (AI / Machine Learning Filtering).
  • முந்தைய அனுபவங்களை நினைவில் வைத்துக் கொண்டு முடிவெடுக்கும் (Bayesian filtering)
  • பயனருக்கு ஒரு சோதனை (படம், கணக்கு, சொல்) வைக்கப்பட்டு, கணினியை விட மனிதர் அனுப்புகிறாரா என்று பார்க்கும் (CAPTCHA)
  • பயனர் அறிக்கையிடல்: பயனர்கள் தாங்கள் பெறும் தேவையற்ற செய்திகளைத் தங்கள் மின்னஞ்சல் சேவை வழங்குநருக்குப் புகாரளிக்கும் வசதி. இந்த அறிக்கைகள், வடிகட்டுதல் வழிமுறைகளை மேம்படுத்தவும், புதிய தேவையற்ற செய்தி ஆதாரங்களை அடையாளம் காணவும் உதவுகின்றன.
Remove ads

முக்கியத்துவம்

  • பயனருக்கு தேவையற்ற மின்னஞ்சல்கள் வருவதை குறைக்கும்
  • மோசடிகளை தடுக்கும்
  • மின்னஞ்சல் சேவைகள் திறம்பட இயங்க உதவுகிறது
  • நிறுவனங்களை இணைய தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கிறது

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads