எரியும் நினைவுகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எரியும் நினைவுகள் (Eriyum Ninaivukal) என்பது யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பொது நூலக அழிப்பைப் பற்றிய ஆவணப்படம் ஆகும். தமிழ் இனத்தின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த இந்நூலகம் அழிக்கப்பட்டதை ஊடகவியலாளர் சி. சோமிதரன் சிரமங்களுக்கு மத்தியில் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார்.[1][2][3]

பின்னணி

1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதியன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. சூன் மாதம் ஒன்றாம் தேதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்த ஈழநாடு தினசரி அலுவலகமும், அதற்கு அருகிலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தையும் திட்டமிட்டு கொளுத்தியது. இச்சம்பவம் இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads