எருசலேம் முற்றுகை (கிமு 597)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கி.மு 605 இல் பாபிலோன் அரசர் இரண்டாம் நேபுகாத்னேச்சரினால் பார்வோன் நேச்வோ ஒரு போரில் தோற்கடிக்கப்பட்ட, தொடர்ச்சியாக யூத அரசு மீதும் படையெடுப்பு நடந்தது. எருசலேமின் அழிவைத் தவிர்ப்பதற்காக யூதாவின் அரசன் யெகோயாகிம் எகிப்துடனான நட்பை விட்டு பாபிலோனுடன் உறவை ஏற்படுத்தினார். எருசலேம் கருவூலத்திலிருந்தும் கோயிலின் பொருட்கள், சில அரச குடும்பத்தினர், குறிப்பிடத்தவர்களை பணயக்கைதியாக செலுத்தினார்.[1] கி.மு 601 இல் நேபுகாத்னேச்சரின் எகிப்து மீதான படையெடுப்பு வெற்றி பெறவில்லை. பாரிய இழப்புக்களுடன் பின்னடைவுக்கு உள்ளானது. இந்தத் தோல்வியினால் பாபிலோனுடன் நட்பு கொண்டிருந்த லெவண்ட் நாடுகளில் புரட்சி ஏற்பட்டது. யூத அரசும் அதன் அரசன் யெகோயாகிம் கப்பம் செலுத்துவதை நிறுத்தி,[2] எகிப்துடன் முன்னர் போல் நட்புக் கொண்டார்.

விரைவான உண்மைகள் எருசலேம் முற்றுகை, நாள் ...
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads