எர்பர்ட் மார்குசே

செருமனிய தத்துவஞானி, சமூகவியலாளர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர் (1898-1979) From Wikipedia, the free encyclopedia

எர்பர்ட் மார்குசே
Remove ads

எர்பர்ட் மார்குசே (Herbert Marcuse 19 சூலை 1898–29 சூலை 1979) என்பவர் செருமானிய அமெரிக்கத் தத்துவ அறிஞர், அரசியல் சமூகத் திறனாய்வாளர் மற்றும் மார்க்சியக் கருத்தாளர் ஆவார். [1]

விரைவான உண்மைகள் எர்பர்ட் மார்குசே Herbert Marcuse, பிறப்பு ...

பெர்லினில் பிறந்த எர்பர்ட் மார்குசே பெர்லின் பல்கலைக் கழகத்தில் படித்து பிரைபர்க்கில்  ஆய்வுப் பட்டம் பெற்றார். செருமனி பிரான்சு நாடுகளில் நடந்த மாணவர்களின் போராட்ட இயக்கங்களில் கலந்துகொண்டார். ப்ராங்க்பர்ட் பள்ளியில்[2] இவர் முக்கிய மார்க்சிய சிந்தனையாளர் எனக் கருதப்படுகிறார்.

புதிய இடதுசாரிகளின் தந்தை எனப் போற்றப்படும் எர்பர்ட் மார்குசே முதலாளியத்தையும் நவீன தொழில் நுட்பத்தையும் அதிகரித்து  வரும் பொழுதுபோக்கு பண்பாடுகளையும் விமர்சனம் செய்தார்.

நூல்களும் கட்டுரைகளும் இவர் எழுதினார்.  சோவியத் மார்க்கியம், ஒன் டைமன்சன் மேன்,  ஈராசும் நாகரிகங்களும் என்னும் நூல்கள் அவற்றுள் சிலவாகும்.

Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads