எலூத்தேரியுஸ் (திருத்தந்தை)
ரோம் பிஷப் சி. 174 முதல் 189 வரை From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தந்தை புனித எலூத்தேரியுஸ் (Pope Saint Eleuterus) (இறப்பு: கிபி 174) (Greek Ελευθέριος) கிபி சுமார் 174ஆம் ஆண்டிலிருந்து சுமார் 189 வரை உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்[1]. வரலாற்றில் இவர் 13ஆம் திருத்தந்தை ஆவார். வத்திக்கானிலிருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வமான "திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" திருத்தந்தை எலூத்தேரியுஸ் 171இலிருந்து 177 வரை (அல்லது 185இலிருந்து 193 வரை) ஆட்சிசெய்தார் என்று கூறுகிறது. இன்றைய துருக்கியில் உள்ள எப்பீரஸ் பகுதியில் நிக்கோப்பொலிஸ் என்னும் பண்டைய கிரேக்க நகரில் அவர் பிறந்தார்.
- எலூத்தேரியுஸ் (பண்டைக் கிரேக்கம்: Ελευθέριος; இலத்தீன்: Eleuterus/Eleutherius) என்னும் பெயர் கிரேக்க மொழியில் "விடுதலை பெற்றவர்", "சுதந்திரமானவர்" என்று பொருள்படும்.
எலூத்தேரியுசின் சமகாலத்தவரான ஹெகேசிப்பஸ் என்பவர் கூற்றுப்படி, எலூத்தேரியுஸ் உரோமைத் திருச்சபையில் ஒரு திருத்தொண்டராக திருத்தந்தை அனிசேட்டஸ் காலத்திலும் (கிபி சுமார் 154-164), அதன் பின் திருத்தந்தை சொத்தேர் காலத்திலும் பணிசெய்துவிட்டு, சொத்தேரின் இறப்புக்குப் பின் திருத்தந்தையாகப் பதவி ஏற்றார் (கிபி சுமார் 174).
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads