எழும்பூர் நீதிமன்ற வளாகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எழும்பூர் நீதிமன்ற வளாகம் (Egmore court complex) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை நகரின் எழும்பூர் பகுதியில் நகராட்சி நீதித் துறை நடுவர் நீதிமன்றங்களுக்காக 1916 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.
நீதிமன்ற வளாகத்தில் தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1, கூடுதல் பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1, பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் 2, துணை நீதிபதி நிலை நீதிமன்றங்கள் 2, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 6, சென்னை மாநகராட்சி நீதிமன்றங்கள் (அல்லிக்குளம்) 2 மற்றும் நடமாடும் நீதிமன்றங்கள் 2 ஆகியவை இடம்பெற்றுள்ளன. 2015 ஆம் ஆண்டில், பொதுப்பணித் துறை நீதிமன்ற வளாகத்தின் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது. ஆனால் செயல்முறை 2017 இல் மட்டுமே தொடங்கப்பட்டது, அதே ஆண்டில் முடிக்கவும் எதிர்பார்க்கப்பட்டது. புனரமைப்புக்கான தொழில்நுட்ப உதவி பாரம்பரிய கட்டமைப்புகளுக்கான பாதுகாப்பு மூலம் வழங்கப்பட்டது.[1]
எதிர்பார்த்ததை விட அதிக சேதம் ஏற்பட்டதாகப் பொதுப்பணித் துறையினர் புகாரளித்ததால், காலக்கெடு 2018 வரை நீட்டிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகள் காரணமாக, புதுப்பிக்கப்பட்ட பிறகு உடனடியாக நீதிமன்ற வளாகம் தொடங்கப்படவில்லை.[2]
நீதிமன்ற வளாகம் இறுதியாக டிசம்பர் 2018 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட காலத்தில், நீதிமன்றங்கள் அல்லி குளம் வளாகத்தில் செயல்பட்டன.[3]
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads