எஸ். எம். அன்சார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எஸ். எம். அன்சார் (இறப்பு: சனவரி 9, 2012, அகவை 74) 'கோவை அன்சார்' என அறியப்பட்ட இவர் ஓர் ஈழத்து இலக்கிய ஆர்வலரும் கவிஞரும் ஆவார். கவி அரங்குகள், நூல் வெளியீட்டு விழாக்கள் இலக்கியச் சந்திப்புக்கள் எங்கு நடந்தாலும் அவர் கட்டாயமாகக் கலந்துகொள்வார். இவர் 'வதனம்' கையெழுத்துச் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். இவர் இலக்கிய ஆர்வலர் சகலரின் மட்டங்களிலும் நேயமாக, அன்புடன் மதிக்கப்பட்டவர்.

இலக்கிய ஈடுபாடு

சிந்தாமணி வாரப் பத்திரிகையில் பிரசுரமான “மணிக்கவிதை” மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமான இவர் நீண்டகாலமாக பத்திரிகைகள், சஞ்சிகைகளில் கவிதை, கட்டுரைகள் எழுதி வந்துள்ளார்.

கவிதை நூல்

  • கனவுகளின் பிரசவம் (புரவலர் புத்தகப் பூங்கா பிரசுரம், 2010)

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • முஸ்லிம் இளம் கலைஞர் முன்னணியின் விருது
  • கலாபூஷணம் விருது

மறைவு

அன்சார் கொழும்பு, பத்தரமுல்லயிலுள்ள சுயாதீன தொலைக்காட்சி அலுவலகத்திற்கு அருகில் 2012 சனவரி 9 திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். கொழும்பு, வாழைத்தோட்டம், சஞ்சியாராய்ச்சித் தோட்டத்தைச் சேர்ந்த இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads