ஏக்நாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏக்நாத் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், பாடலாசிரியர், நாவலாசிரியர். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்ற ஏக்நாத், பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலைப் பயின்றார். இளம் வயதிலேயே எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், கவிதை, சிறுகதைகளை எழுதி வந்தார். சென்னையில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் இவர், திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதி வருகிறார். ’மெட்டி ஒலி’ டி.வி. தொடரில் இடம்பெறும், ‘மனசே மனசே துடிக்குது மனசே’ என்ற பாடல் மூலம் பாடலாசிரியர் ஆனார். பின்னர் இயக்குநர் பிரபு சாலமன் ’லீ’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அடுத்து அவர் இயக்கிய ’மைனா’ படத்தில் ’நீயும் நானும் வானும் மண்ணும்’ என்ற பாடலை எழுதினார். தொடர்ந்து, தனுஷின் 'உத்தமப்புத்திரன்' படத்தில் 'கண்ணிரெண்டில் மோதி', 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் லட்சுமிமேனன் பாடிய 'குக்குறு குக்குறு குக்குறு’, 'மீகாமன்' படத்தின் 'யாரோ யாரோ', சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தில், 'நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் ஆகிடுமா?', வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ படத்தில் ’என் மினுக்கி’ உட்பட பல பாடல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதி வருகிறார்.
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
Remove ads
எழுதிய நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- கெடாத்தொங்கு
சிறுகதை தொகுப்புகள்
- பூடம்
- குள்ராட்டி
- மேப்படியான் புழங்கும் சாலை
நாவல்கள்
- கெடை காடு
- ஆங்காரம்
- வேசடை
- அவயம்
- சாத்தா
கட்டுரைகள்
- ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
- ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம்
- குச்சூட்டான்
’கெடாத் தொடங்கு’ என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் கவனிப்பைப் பெற்ற இவர், அடுத்து கவிதைத் தொகுப்புகளை வெளியிடவில்லை.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads